1. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? விடை: நிலா
2. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன? விடை: பெட்ரோல்
3. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
விடை: இதயம்
Language of Children's Stories is a blog dedicated to enriching young minds through the magic of storytelling.
1. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? விடை: நிலா
2. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன? விடை: பெட்ரோல்
3. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
விடை: இதயம்
1. பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன?
விடை: தேயிலை
2. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
விடை: சீப்பு
3. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
விடை: உப்பு
4. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
விடை: சீப்பு
5. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?
விடை: அகப்பை
6. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்?
விடை: ரேடியோ
1. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன?
விடை: தேங்காய்
2. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை.
அது என்ன?
விடை: வானொலி பெட்டி
3. கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
விடை: சோளப்பொத்தி
4. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?
விடை: பாம்பு
5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி.
6. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன?
விடை: சூரிய காந்தி
1. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? விடை: நாணயம்
2. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ?
டை: கண்
3. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
விடை: வேர்கடலை
4. பட்டுப்பை நிறைய பவுண் காசு. அது என்ன?
விடை: வத்தல் மிளகாய்
5. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்?
விடை: கடிகாரம்
1. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
விடை: பஞ்சு
2. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன?
விடை: தென்னை
3. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?
விடை: கொசு
4. மழையில் பிறந்து வெயிலில் காயுது?
விடை: காளான்
5. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? விடை: பந்து
1. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
விடை: நிழல்
2. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
விடை: நாற்காலி
3. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
விடை: வாழைப்பழம்
4. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன?
விடை: வாய்
5. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? விடை: படகு
1. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
பட்டுத்துணி
2. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
பட்டாசு
3. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
பற்கள்
4. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
அகப்பை
5.காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
சூரியன்
6. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
சோளக்கதிர்
7. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
உப்பு
8.ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
கடல்
9. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
நிழல்
10. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
சைக்கிள்
ஒரு ஊரில் ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...