Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 17

1. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்? 

விடை: பஞ்சு

2. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன?

விடை: தென்னை

3. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?

விடை: கொசு

4. மழையில் பிறந்து வெயிலில் காயுது?

விடை: காளான்

5. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? விடை: பந்து


No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed