Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 20

1. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன?

விடை: தேங்காய்

2. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை.

அது என்ன

விடை: வானொலி பெட்டி

3. கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?

விடை: சோளப்பொத்தி

4. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?

விடை: பாம்பு

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

விடை: அஞ்சல் பெட்டி.

6. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன?

விடை: சூரிய காந்தி 

No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed