Wednesday, August 28, 2024

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

 நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன் வளர வளர அவனுக்கு அரண்மனை மிகவும் போர் அடிக்க ஆரம்பித்தது. பெரிதாக எந்த வேலையும் அவனுக்கென்று இல்லாதது ஆச்சர்யமாக உணர்ந்தான்.


அரண்மனையில் வேலை செய்யும் அனைவருமே பரபரப்பாக இருந்தார்கள். இளவரசன் தான் இப்படி சும்மா அங்கும் இங்கும் நடந்து செல்கிறோம் அவ்வளவுதானே என சலித்து கொண்டான். மற்றவர்கள் ஏன் இப்படி பரபரப்பாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அங்கு சென்றால் அவர்கள் இளவரசர் வந்துவிட்டார் என எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக நின்று விடுகிறார்கள். அது இளவரசனுக்கு மேலும் கடுப்பை கொடுத்தது. இதற்கு முடிவு கட்ட நினைத்த இளவரசன் சமையலறை எப்போதுமே பரபரப்பாக இருக்கிறது. அதனால் அங்கு செல்லலாம் என முடிவு செய்தான். ஆனால் இந்த முறை இளவரசனாக அல்லாமல் சமையலறையில் எடுபுடி வேலை செய்யும் பையனை போல மாறு வேடம் போட்டு சென்றான். அங்கு உள்ளே நுழைந்ததும் ஒரு 10, 15 பேர் அதிரடியாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். என்னடா இது? நமக்கு ஒரு வேலை இல்லை இவர்கள் நிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள் என யோசித்து கொண்டே இருந்தான். அவன் அருகில் இருந்த ஒருவன் என்னடா வேடிக்கை பார்க்கிறாய், இளவரசர் உணவருந்த அந்த வெள்ளி தட்டுகளை சுத்தம் செய் என்றான்.

ஒரு தட்டில் தானே சாப்பிட போகிறார் அதற்கு ஏன் இவ்வளவு சுத்தம் செய்ய வேண்டும் என்றார் இளவரசன். அதற்கு எதிரில் இருந்தவன் ஆனால் அவர் எந்த தட்டில் சாப்பிடுவார் என தெரியாது ஆகையால் மேஜையில் தட்டுகள் நிறைந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் தூக்கி எறிவார் என்றான்.

அதை கழுவி முடிப்பதற்குள் ஆரஞ்சு மற்றும் திராட்சை பழங்களை வைத்து தோல்களை நீக்க சொன்னான். அதற்கு திராட்சை தோல்களையுமா என்று கேட்டான் இளவரன். ஆமாம், திராட்சை தோல்கள் அவர் வாயில் சிக்கினால் எதிரில் இருப்பவன் செத்தான் என்றான். இளவரசன் யோசிப்பதற்குள் உடைகளை துவைத்து காயவைத்து சரியாக மடித்து இருக்க வேண்டும் என ஒருவன் துணி மூட்டையை கொடுத்தான்.

தன்னைத்தானே திட்டி கொண்டு அந்த வேலைகளை செய்து முடித்தான். அதற்குள் இளவரசர் உணவில் இருக்கும் சீரகத்தை தனியாக எடுக்க வேண்டும் என்றான் ஒருவன். கண்கள் பிதுங்கி வெளியே வரும் அளவுக்கு முழித்தான் இளவரசன். ஏன்.. ஏன் என்றான். அதற்கு அருகில் இருந்தவன் அவருக்கு உணவில் சீரகம் இருப்பது பிடிக்காது என்றான். அப்படியென்றால் அதை போடாமல் சமைக்கலாமே என்றான் இளவரசன். அப்படி செய்தால் ருசி இல்லை என பயங்கரமான தண்டனைகளை கொடுப்பார் என்றான். அவ்வளவு கொடுமைக்காரனா என இளவரசன் கேட்க, கொஞ்சம் சோம்பேறி அவ்வளவுதான் என சொல்லி முடித்தான். இளவரசனுக்கு ஒரு வேலை இல்லாமல் இவர்களே செய்து முடித்தால் நான் என்ன செய்வேன் என் பொழுதை போக்க என யோசித்து கொண்டே தனது அறைக்கு வந்தான். கொஞ்ச நேரத்திலே உணவு தயார் என செய்தி வர காலையில் இருந்து வேலை செய்த அலுப்பில் இருந்தான் இளவரசன்.

அந்த சோர்வான முகத்துடன், அவன் முன் வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டான். இதில் இருக்கும் சின்ன சின்ன உழைப்பும் அவன் கண் முன் வந்தது. அங்கிருந்த வேலையாட்களிடம் கனிவாக பேச ஆரம்பித்தான். அவனிடம் ஏதோ மாற்றம் இருப்பதை பணியாட்கள் புரிந்து கொண்டார்கள். அதன்பிறகு அவன் பல வேலைகளை தானே செய்து கொண்டான். இதனால் அவன் மனது நிம்மதியாக இருந்தது. சும்மா இருப்பதாக எந்த எண்ணமும் அவனுக்கு தோன்றவில்லை.


Tuesday, August 27, 2024

அம்மாவின் செயலால் அதிர்ந்த குழந்தைகள்.. உங்களுக்கு இப்படி நடந்திருக்கா?

 லில்லி, ஜிம்மி ரெண்டு பேருமே இரட்டையர்கள். நன்றாக படிக்க கூடியவர்கள். லில்லி சமத்து பெண். ஜிம்மி சுட்டி பையன். இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள், ஒன்றாக கதை படிப்பார்கள். எடுத்து செய்தாலும் ஒன்றாகவே செய்வார்கள்.


அவர்களின் வீட்டின் எதிர்புறம் புதிதாக ஒரு குடும்பம் குடியேறியது. அந்த வீட்டில் ஸ்டீபன் என்ற சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் துரு துறுவென இருக்கும் சிறுவன். ஒருநாள் லில்லியின் அம்மா ஜிம்மி மற்றும் லில்லி இருவரையும் கடைக்கு செல்ல போகிறேன் வாருங்கள் என அழைத்தார். ஆனால் லில்லி புத்தகம் படித்து கொண்டிருந்ததால் வரவில்லை என மறுத்துவிட்டாள். அம்மா, ஜிம்மி நீயாவது அம்மாவுடன் வரலாம் இல்லையா என கேட்க, நானும் லில்லியுடன் படிக்க போகிறேன் என அங்கிருந்து ஓடி லில்லியிடம் சென்றான். சரி லில்லி, நீ படித்து முடித்த பிறகு சொல் நாம் போகலாம் என்றார் அம்மா. ஆனால் லில்லிக்கு கடைக்கு போக விருப்பம் இல்லாததால் வரவில்லை ஹோம் ஒர்க் இருக்கு என சாக்கு சொல்ல ஆரம்பித்தாள். அம்மாவும் வேறு வழி இல்லாமல் கடைக்கு சென்றார்.

அவர்கள் இருவரும் புத்தக படிப்பில் மூழ்கினர். திடீரென அவர்களுக்கு தோட்டத்தில் ஒரு சத்தம் கேட்டது. என்னடா அது என ஜன்னல் வழியாக எட்டி பார்க்க அவர்களின் சைக்கிளை யாரோ ஒரு பையன் ஓட்டுவதை கண்டார்கள். இது அவன்தான் என கத்திகொண்டே, வேகமாக தோட்டத்தை பார்த்து ஓடினார்கள். பார்த்தால் வாசலில் அம்மா, அவனை பார்த்து சிரித்து கொண்டிருக்க என்ன இது அம்மா நமது சைக்கிளை அவன் ஓட்டுவதை பார்த்தும் திட்டவில்லை என யோசித்தனர். அம்மா கடைக்கு போகவில்லையா என லில்லி கேட்க, என்ன படித்து முடித்துவிட்டீர்களா? என் அம்மா கேட்டார். இல்லை இல்லை அது தோட்டத்தில் இருந்து சத்தம் வந்தது, அது எங்களது சைக்கிள் என சொல்லி முகத்தை தொங்க போட்டார்கள். ஓ, அதுதான் விஷயமா? வேறு ஒன்றுமில்லை. அவன் பக்கத்து வீட்டு ஸ்டீபன், புதிதாக வந்துள்ளார்கள். நான் கடைக்கு போய்விட்டு பொருட்களை தூக்கி கொண்டு நடக்க கஷ்டப்பட்டு வந்து கொண்டிருந்தேன். அப்போது ஸ்டீபன் அதை பார்த்து ஓடி வந்து உதவினான்.

நானும் எதாவது வேணுமா என்று கேட்டேன், அவன் ஏதும் வேணாம் என சொல்லி விட்டான். அப்போதுதான் அவனின் அம்மா சொன்னார், ஸ்டீபன் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கில்லாடி என்று. சரி எது வேண்டுமென்றாலும் கேட்டுக்கொள் என ஸ்டீபனிடம் கேட்டேன். அவன் அந்த சைக்கிளில் ஒரு ரவுண்ட் கேட்டான் அதான் கொடுத்தேன் என சொல்ல இருவர் முகமும் வாடியது. அப்போது ஸ்டீபன் அங்கு வந்து, இந்த சைக்கிளை நான் வைத்து கொள்ளவா? இது இருந்தால் என்னால் என் பாட்டிக்கும் கடையில் பொருட்கள் வாங்கி தர முடியும் என்றான். அம்மா சரி என தலையை ஆட்ட முற்படுவதற்குள், லில்லி மற்றும் ஜிம்மி சட்டென ஒரே குரலில் முடியாது என்றனர். அம்மா அதிர்ந்து போய் இருவரையும் பார்க்க, சாரி அம்மா.. நங்கள் உதவி இருக்க வேண்டும் அது எங்கள் தவறுதான். இனிமேல் உங்களுடன் கடைக்கு நாங்களும் வருகிறோம் என்று சொன்னார்கள். அவன் உதவி செய்ததற்காக வேண்டுமென்றால் இன்னும் 2,3 ரவுண்ட் அடித்து விட்டு தரட்டும் என சொன்னார்கள். அம்மாவும் தந்து குழந்தைகளை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டார். உங்கள் வாழ்க்கையில் இப்படி எதுவும் நடந்திருக்கா, அப்போ நீங்க என்ன பண்ணீங்க.. கமெண்ட்டில் சொல்லலாம்.


புத்தகத்தை பறிகொடுத்த நண்பர்கள்.. இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கலையே!

 ஆலன் வேகமாக ஓடிவந்து நண்பர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில நின்றான். டேய், இந்த ஜெப் என்னோட அட்வெஞ்சர் புக் வாங்கினான், படிச்சிட்டு தருவான்னு நினைத்து குடுத்த தரவே மாற்றான் என்று சொல்ல, அட என்னோட புக் 5 அவன் கிட்ட இருக்கு இன்னும் தரள என்றான் டிக். அந்த நேரம் ஜெப் அங்கு வர, டேய் அந்த புக்கை எப்போ தருவ என ஆலன் கேட்க, நாளைக்கு என்று நிற்காமல் பதில் சொல்லி கிளம்பினான் ஜெப்.


அதெல்லேம் உனக்கு கிடைக்காது என சிரித்து கொண்டே சொன்னாள் எல்லி. ஏன் அப்படி சொல்ற, எனக்கும் இதைத்தான் சொல்றான். ஆனா தர மாற்றான், நீ வேணுனா நாளைக்கு பாரு மறந்துட்டேன்னு சொல்லுவான் என்றாள் எல்லி. மறுநாள் ஜெப் புத்தகம் எங்கே என ஆலன் கேட்க, ஸ்கூல் புக் ஓவர் வெயிட் ஆ இருக்கு அதனால எடுத்துட்டு வர முடியல, நாளைக்கு தரேன் என்றான். இதை கேட்டதும் ஆத்திரம் அடைந்த டிக் என்னோட புக் எப்போடா தருவ, எவ்ளோ நாள் ஆச்சு நீ வாங்கிட்டு போய் என்றான். சீக்கிரம் டா படிச்சி முடிக்கலை என சொல்லிக்கொண்டே நடந்தான். அவன் வகுப்பில் இதே போல பலரிடமும் புத்தகம் வாங்கி திருப்பி தராமல் ஏமாத்தி இருப்பதை தெரிந்து கொண்ட டிக்க்கும் ஆலனும் சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என யோசித்தார்கள். டிக் ஆலனை அழைத்து கொண்டு, ஜெப் வீட்டிற்கே சென்றான். ஜெப் அம்மா கதவை திறக்க, அவன் இல்லையேப்பா என்று சொன்னதும் , டிக் சொன்னான் ஜெப் புக் வாங்கிட்டு தரவே இல்லை கேட்டாலும் சாக்கு சொல்கிறான் நாங்க எடுத்துக்கலாமா என கேட்க, அட இந்த பையன் ஏன் இப்படி செய்தான் என வருத்தப்பட ஜெப் அம்மா எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.

மாடியில் அவன் அறைக்கு சென்ற டிக், ஆலன் வாயை பிளந்து பார்த்தார்கள். ஒரு பெரிய புக் ஷெல்ப் இருந்தது. இதோ என்னோட அட்வெஞ்சர் புக் என ஆலன் எடுக்க, டிக் அவனது 5 புத்தகத்தையும் தேடி எடுத்தான். அப்படியே எல்லி புத்தகத்தை தேட, அதில் டாம், நோரா, ஜெர்ரி என அவங்க வகுப்பு மட்டுமில்லாமல் மற்ற வகுப்பில் உள்ள பலரின் புத்தகமும் இருந்தது. அதை எல்லாம் இவர்களால் தனியாக எடுத்து வர முடியாது. அதனால் தள்ளு வண்டி ஒன்றை தேட டிக் கீழே சென்றான்.

மொத்தம் 37 புத்தகங்கள் அதை எடுத்து கீழே கொண்டு வந்தான் ஆலன். இதை பார்த்த ஜெப் அம்மா இது எல்லாமே உங்களுடையதா என கேட்க, நண்பர்களுடையதும் இருக்கிறது எதையுமே அவன் திருப்பி கொடுக்கவில்லை என சொல்ல, அம்மா அதிர்ந்து போனார். அப்போ அவன் ஷெல்ப்பில் புத்தகம் எதுவுமே இல்லையா என கேட்க ஒரு 5 புத்தகங்கள் அவனையுடையதாக இருக்கலாம் என்றான் ஆலன். டிக் தள்ளுவண்டி கொண்டு வர, அதில் எடுத்து வைத்துவிட்டு ஜெப் அம்மாவிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்கள். வெளியில் விளையாட சென்ற ஜெப் திரும்பி வர அவன் அறைக்கு சென்றான். அவன் புத்தக ஷெல்ப்பில் புத்தகங்களை காணவில்லை என் கத்த, அம்மா ஓடி வந்து நீ நண்பர்களின் புத்தகத்தையா வைத்திருந்தாய் என திட்ட இல்லையே என்றான் ஜெப். உன் நண்பர்கள் டிக் ஆலன் இருவரும் வந்து அவர்களுடையது என எடுத்து சென்று விட்டார்கள், நீ அவங்க கிட்ட போய் எது வேண்டும் என்றாலும் கேட்டுக்கோ என்றார். மறுநாள் பள்ளிக்கு சென்ற ஜெப், அவர்கள் இருவரையும் தேட அவர்கள் புத்தகத்தை யார் சொந்தக்காரர்களோ அவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தார்கள். கோவமாக போன ஜெப் இதெல்லாம் என் புக், நீ எப்படி அவங்ககிட்ட கொடுக்க முடியும் என கேட்க, ஓ அப்படியா, சரி புத்தகத்தை திறந்து முதல் பக்கத்தை பார் என அவனிடம் நீட்டினான் ஆலன். அதில் யார் பெயர் இருக்கிறது என கேட்க லின்சி என்றான் ஜெப். டிக் அவனிடமிருந்த புக்கை பிடிங்கி லின்ஸ்யிடம் கொடுத்தான்.

அப்படி வரிசையாக எல்லா புத்தகத்திலும் அவர்களது பெயர் முகவரி இருந்தது. இதை பார்த்து ஷாக் ஆனான் ஜெப். இவன் அதை எதிர்பார்க்கவில்லை. புத்தகத்தில் பெயர் இருக்க இல்லையா என்பது கூட தெரியவில்லை. அப்படி என்றல் நீ எதையுமே திறந்து கூட பார்க்கவில்லை என ஆலன் கேட்க, டிக் அவனை கேலி செய்தான். ஜெப் அங்கிருந்து வேகமாக ஓடினான். இதைவைத்து அவனை யாரும் கேலி செய்ய கூடாது என ஆலன் கேட்டுக்கொள்ள அதே போல யாரும் அவனை கேலி செய்யவில்லை. ஜெப் அதன் பிறகு யாரிடமும் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதிலாக 2 புத்தகங்கள் அவன் அம்மா கொடுத்த பாக்கெட் மணியில் வாங்கி வைத்திருந்தான்.

உங்கள் நண்பர்கள் யாராவது புத்தகத்தை திருப்பி கொடுக்காமல் இருந்திருக்கிறார்களா? அப்போ நீங்க என்ன பண்ணீங்க. உங்கள் அனுபவத்தை இங்கு பகிரலாம். 

இப்படி ஒரு வாழ்க்கையா? அலுத்து கொண்ட முயல்கள்!

 தலை தெறிக்க ஒரு முயல் காட்டுக்குள் ஓடி வர, பின்னால் ஏதோ ஒரு மிருகம் விரட்டுவது போல மரம், செடி, கொடிகள் ஆட முயல் ஒரு இடத்தில் நின்று அதன் கூட்டத்தை அழைக்கிறது. உயிரை கைல பிடிச்சிட்டு ஓடி வந்திருக்கேன். என்னால் இப்படி பயந்தெல்லாம் வாழ முடியாது என கத்துகிறது.


முயல் இப்படி கத்தி கூச்சலிடுவதை கேட்ட மொத்த முயல் கூட்டமும் பதறி போய் வெளியில் வந்தன. ஓடி வந்த முயல் கூச்சல் இட்டு கொண்டிருக்கும்போதே இன்னொரு முயலும் தலை தெறிக்க ஓடி வர அதன் கழுத்து மற்றும் கால்களில் ரத்தம் கொட்டியது. அதற்கு மருந்து கொண்டு வந்து கொடுப்பதற்குள் அது இறந்தும் போனது. இதை பார்த்து கொண்டிருந்த தலைவன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ன செய்யலாம் என தனது கூட்டத்தை பார்த்து கேட்டது. ஆளுக்கொரு யோசனை சொல்ல, எதுவும் தலைவருக்கு சரியாக தோன்றவில்லை. முதலில் ஓடி வந்த முயல் இதெல்லாம் சரியாக வராது. நாம் இருந்தால் தானே இவர்கள் நம்மை கொல்ல துடிப்பார்கள். நாமும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓட வேண்டாம் என சொல்ல மத்த முயல்களும் ஆமாம் நாம் என் வாழ வேண்டும், மற்றவர்களுக்கு இரையாக வேண்டும். தினம் தினம் உயிருக்காக போராட வேண்டும் இதற்கு நாம் அனைவரும் இறப்பதே சிறந்த வழி என ஒன்றாக முடிவெடுக்க, தலைவரும் சரி என ஏற்று கொள்கிறார்.

சரி அப்போ நாளை காலை எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அருகில் இருக்கும் குளத்தில் விழுந்து இறக்கலாம் என முடிவு செய்து, ஒரு கூட்டமே கிளம்பியது. குளத்தை நோக்கி வேகமாக படையெடுக்க செடி கொடிகள் அசைய, அந்த இடமே பயங்கர சத்தத்துடன் அதிர ஆரம்பித்து.

குளத்தின் அருகில் கூட்டமாக பேசி கொண்டிருந்த தவளைகள் ஏதோ பயங்கரமான விலங்கு கூட்டம் வருகிறது போல என பயந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, முயல் கூட்டத்தின் இந்த செயல் அங்கிருந்து சின்ன சின்ன உயிரினங்கள் அனைத்தையும் பயந்து தலை தெறிக்க ஓட வைத்தது. கூட்டமாக பேசி கொண்டிருந்த தவளைகள் குளத்தில் வேகமாக குதிக்க ஆரம்பித்தன. இதனால் குளத்தில் இருந்த மீன்கள் வேகமாக ஆழமான இடத்திற்கு சென்றன.

இதை பார்த்த முயல் கூட்டத்தின் தலைவன் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகினான். தனது கூட்டத்தை ஒரு நொடி நிற்க சொன்னான். குளத்தின் அருகில் இருந்த சிறு உயிரினங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தாங்கள் ஓடியதை போலவே இருந்ததை உணர்ந்தது.

தனது கூட்டத்திடம், நாம் எந்த உயிருக்கும் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. ஆனாலும் அவை நம்மை பார்த்து பயப்பட ஆரம்பித்தன. ஆக இதுதான் வாழ்க்கை. இதை வாழ நாம் அன்றாடம் ஓடியாக வேண்டும். நாம் மட்டுமில்லை இங்கு வாழும் அனைவருமே ஓடியாக வேண்டும். அப்படியென்றால் இருக்கும் இந்த நொடியை நாம் அனுபவித்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று தலைவர் கூறியதும் முயல்களுக்கு தாங்கள் தவறான முடிவை எடுத்தது புரிந்தது. அது போல இறப்பு எதற்கும் தீர்வு கிடையாது என்பதையும் புரிந்து கொண்டன.


அந்த மூதாட்டியா இது? ஷாக் கொடுத்த இளவரசி!

 நாட்டின் அரசன் பக்கத்து நாட்டு இளவரசர்களுக்கு ஒரு ஓலை அனுப்ப அதில் தனது மகளுக்கு வரன் பார்ப்பதாகவும் தகுதியுள்ளவர்கள் அரண்மனையில் தங்கி விருந்து உண்டு செல்லலாம். இளவரசிக்கு யாரை பிடிக்குதோ அவரை மணம் முடிப்பார் என இருந்தது.

இந்த ஓலை கிடைத்த அரசர்கள், இளவரசர்கள் என பலரும் அந்த ராஜ்யத்திற்கு வந்தார்கள். அரண்மனைக்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் அவர்களை பார்த்து பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு விருந்து உபசரணைகளை செய்து கொடுத்தார். அவர் யார் என யாருக்கும் தெரியாததால் பணிப்பெண் என நினைத்து கொண்ட இளவரசர்கள் இளவரசிக்காக காத்து கொண்டிருந்தார்கள். ஆனால் முதல் நாள் இளவரசியை யாருமே காணவில்லை. மறுபடியும் ஒரு பெரிய மேலங்கியை அணிந்து வந்த அதே வயதான பெண்மணியை தான் அனைவரும் பார்த்தார்கள். அரசரை தேடி சென்று இளவரிசியை எப்போதுதான் காண்பிப்பீர்கள், வெகு தொலைவில் இருந்து நாங்கள் வந்துள்ளோம் என கோவமாக கடிந்து கொள்ள, அரசரோ என் மகள் தினமும் உங்களை காண்கிறாள். நீங்கள் எப்படி பார்க்காமல் இருந்தீர்கள் என்று கேட்டார்.

எது! இளவரசியா தினமும் ஒரு வயதான கிழவியை தான் பார்க்கிறோம். இங்கு எந்த இளவரசியும் இல்லை என்று சத்தமாக சொல்ல அரசர் தனது மகளை வரவழைத்தார். வந்தது அதே வயதான பெண்மணி தான். அதிர்ச்சி ஆன இளவரசர்கள் இதுதான் இளவரசியா என கோவமாக கேட்க ஆமாம் என்றார் அரசர். ஆத்திரமடைந்த இளவரசர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பினார்கள்.

அரசர் இதை எதையுமே பெரிதாக எடுத்து கொள்ளாமல், அடுத்த ஓலையை இன்னும் சில நாடுகளுக்கு அனுப்பினார். இந்த முறை இளவரசி அவர்களை வரும் வழியிலே பார்த்து பிச்சை கேக்கும் பெண்ணை போல நடந்து கொண்டாள். அவள் எதிர்பார்த்த மாதிரி யாருமே வரவில்லை. வந்தவர்கள் பெரும்பாலும் பிச்சை வேணுமா உனக்கு என அவளிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். அந்த நேரம் இளவரசன் ஒருவன் இவளை பார்த்ததும் பிடித்து கீழே தள்ளிவிட்டு அரண்மனை நோக்கி சென்றான். அங்கு விருந்தை உண்ண அமர்ந்தான். அவனுக்கு எல்லா உணவுகளுமே கசந்தது. கோவப்பட்டு எழுந்தவனை வயதான இளவரசி நீ ஒரு வயதான பிச்சைகாரிக்கு உணவளிக்க முடியவில்லை என்றால் உன்னால் ஒரு நாட்டு மக்களை எப்படி பார்த்துக்கொள்ள முடியும் என திட்டி அனுப்ப, அந்த சமயம் இன்னொரு இளவரசன் அரண்மனையில் நுழைகிறான்.

இளவரசி தேடும் ஒரு பண்பாளனாக தன்னை அவளிடம் நிலை நிறுத்தினான். அவள் வைத்த அறிவார்ந்த போட்டிகளில் இளவரசி எதிர்பார்த்த பதில்களை சொல்லி அசத்தினான். சரி கடைசி கேள்வி, ஏன் வயதான தோற்றமுடைய என்னை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என இளவரசி கேட்க, உங்கள் மனது வைரம் போன்றது. வெளி தோற்றம் பெரிய விஷயமே இல்லை, எங்கள் நாட்டில் கைதேர்ந்த மருத்துவர்கள் உள்ளார்கள் என்னால் சரியாக்க முடியும். இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை என சொல்ல, இளவரசி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். தந்தையிடம் சொல்லி திருமண விருந்தை ஏற்பாடு செய்தாள். இதற்குமுன் இவளை ஏளனமாய் பார்த்த அனைத்து இளவரசர்களையும் வரவழைத்தாள். மணப்பெண்ணாக தயார் ஆன இளவரசி, இளவரசனின் கைகளை பிடித்து கொண்டு அரண்மனையில் நடந்து வர பலரும் கேலி செய்து சிரித்தார்கள். அவள் அந்த மேலங்கியை கழட்டாமல் நடந்து வந்து மேடை ஏறியதும் தனது கணவர் மற்றும் மற்ற அரசர்கள் முன்னிலையில் அந்த மேலங்கியை கழட்ட அந்த இடமே அதிர்ச்சியில் உறைந்தது.

ஆமாம் இளவரசி தற்போது வயதான மூதாட்டி தோற்றத்தில் இருந்து அழகான இளம் பெண்ணாக மாறி இருந்தார். அந்த மேலங்கிக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது என அரசர் சொல்ல, அனைவரும் வாயடைத்து போனார்கள்.


பாட்டியை ஏமாற்றிய காக்கா.. இவரையும் விட்டுவைக்கலையா!

 ராஜ்ஜியத்தின் அரசர் தனது நாட்டை மிகவும் வளமாக வழி நடத்தினார். அவருக்கு மக்கள் மட்டுமில்லாமல் தனது நாட்டை சுற்றி இருக்கும் காடுகளும் வளமாக இருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்து வந்தார். அங்கு இருக்கும் விலங்குகளும் மன நிறைவாக கட்டுப்பாட்டுக்குள் வாழ்கின்றனவா என அரசருக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது.


அப்போது காட்டுக்கே சென்று அதை தெரிந்துகொள்ள முடிவு செய்த அரசர், அங்கு சென்றதும் ராஜாவாக சிங்கம் கட்டுப்பாடுகளை வைத்து வழி நடத்துவதை பார்த்து பெருமிதம் கொண்டார். பின்னர் அங்கு நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்த அரசருக்கு எல்லா விலங்கினங்களும் சிங்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது தெரிந்தாலும் பறவைகள் சரியாக கட்டுப்படவில்லை என்பதை புரிந்து கொண்டார். ராஜ்ஜியத்திற்கு சென்று முதல் வேலையாக அறிக்கை ஒன்றை அறிவித்தார். அதில் நாட்டின் மக்களை வழிநடத்த நான் அரசனாக இருக்கிறேன். அதே போல காட்டில் ராஜாவாக சிங்கம் விலங்குகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஆனால் இதில் பறவைகள் சரியாக கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகையால் ராஜ்ஜியத்தில் உள்ள அணைத்து பறவைகளும் நாளை அரண்மணை கார்டனில் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தது.

இந்த அறிவிப்பை கேட்டதும் பறவைகள் என்னவாக இருக்கும் என பயந்து போய் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டன. அங்கு காகமும் தனது கூட்டத்துடன் செல்ல மற்ற பறவைகள் வண்ண மயமா இருக்கும்போது காகம் மட்டும் கருப்பாக இருப்பதை பார்த்த மற்ற பறவைகளை காக்கை கூட்டத்தை ஏளனமாய் பார்த்தது.

அரசர் அந்த சமயம் அங்கு வர, சல சலப்பாய் இருந்த பறவைகள் கூட்டம் அமைதியாய் ஆகின. அரசர் அறிக்கையில் சொன்னவாறு பேச, பறவைகள் ஒரு சத்தமும் இல்லாமல் அடுத்து என்ன என்று கேட்டுக்கொண்டிருக்க, உங்களுக்குள் ஒருவரை அரசராக தேர்ந்தெடுக்க போகிறேன். அவர் சொல்வதுதான் இனி உங்களுக்கு வழிமுறை நாளை மறுநாள் மீண்டும் இங்கு வாருங்கள் என சொன்னதும் பறவைகள் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு அங்கிருந்து சென்றன. அரசர் யாரை தேர்ந்தெடுக்க போகிறார் என மொத்த பறவைகள் கூட்டம் காத்திருக்க அந்த நாளும் வந்தது. அரசரை காண பறவைகள் செல்ல, வண்ணங்கள் நிறைந்த ஒரு வினோதமான பறவையை அரசர் அன்று கூட்டத்தில் பார்த்தார். பார்த்ததும் அவருக்கு அதன் மேல் ஈர்ப்பு ஏற்பட, அதை பறவைகள் இனத்திற்கு அரசராக அறிவித்தார். யார்டா இவன் புதிதாக இருக்கிறான் என பறவைகள் அந்த புதிய பறவை மீது கோவப்பட அரசர் அங்கிருந்து அனைவரையும் கலைந்து போக சொன்னார். பறவைகள் கூட்டத்தை கூட்டி வழிமுறைகளை அறிவிக்க பறவையின் அரசர் ஒரு இடத்தை சொல்ல எல்லா பறவைகளும் அங்கு கூடின. ஆனாலும் இதன் இறக்கைகள் பல பறவைகள் உடையது போல இருந்ததை கவனித்த சில பறவைகள் அரசர் என்றும் பாராமல் அதன் மேல் துருத்தி கொண்டிருந்த ஒரு சிறகை பிடுங்க அது கையோடு வந்தது. இதை பார்த்த மற்ற பறவைகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இவன் உண்மையில் வண்ண பறவையே இல்லை என மற்ற சிறகுகளையும் பிடுங்க அது ஒரு காகம் என வெட்ட வெளிச்சமானது. இதை பொருட்படுத்தாத காகம் நான் தான் அரசன் என் பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என தீர்மானமாக சொன்னது. மற்ற பறவைகளை மட்டுமில்லாமல் அரசரையும் காகம் ஏமாற்றியது தெரியவந்தது. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. காகமும் பறவைகள் கூட்டத்தை சிறப்பாக வழிநடத்தியது. அதனால் அதை கேலி செய்த பறவைகள் கூட்டம் மனம் வருந்தின.


நீதி கதைகள்: மணியால் வந்த சோதனை.. பப்புக்கு என்னாச்சு தெரியுமா?

 ஒருநாள் நல்ல மழை, ராஜன் தனது தோட்ட வேலைகளை முடித்துவிட்டு கிளம்ப வழி பாதையில் சத்தம் கேட்டு அருகில் சென்றான். குட்டியாக மழையில் நனைந்தவாறு நாய் இருக்க அதன் மேல் பரிதாபப்பட்டு ராஜன் தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்தான். மிகவும் குட்டியாக ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் புசு புசு என பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது. ராஜனுக்கு மட்டும் இல்லாமல் அந்த பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் அதை பாசமாக கொஞ்ச ஆரம்பித்தார்கள்.


அதற்கு பப்பு என பெயர் வைக்க, அதுவும் எல்லோரிடமும் ஜாலியாக விளையாட ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல பப்பு வளர ஆரம்பித்தது. முன்பு சாதுவாக இருந்த பப்புவின் குணாதிசயம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. ராஜனை தவிர யாரை பார்த்தாலும் பின்னால் சென்று அவர்களுக்கு தெரியாமல் கடிக்க ஆரம்பித்தது.

அதிலிருந்து ராஜனின் வீட்டிற்கு வர யோசித்தார்கள். ஆனால் ராஜனுடன் வியாபாரம் செய்பவர்கள் பயந்து பயந்து வந்தார்கள். பலரும் ராஜனிடம் இதற்கு ஏதாவது தீர்வு இருந்தால் நல்லது என கேட்க, ஆட்டு குட்டி கழுத்தில் கிடந்த மணியை எடுத்து பப்புவின் கழுத்தில் கட்டினார் ராஜன். பப்புவும் ஏதோ பெரிய பதக்கம் கிடைத்தது போல மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க மணியின் சத்தம் தெளிவாகவே எல்லோர்க்கும் கேட்டது. அதிலிருந்து ராஜனின் வீட்டிற்கு வருபவர்கள் உஷாராக ஆரம்பித்தார்கள். மணி சத்தம் கேட்டாலே பப்பு வருகிறது என தெரிந்து கொண்டார்கள். அதன் பிறகு பப்புவால் யாரையும் கடிக்க முடியவில்லை. பப்பு அருகில் வரும் சத்தம் கேட்டதுமே எல்லோருமே ஒதுங்க ஆரம்பித்தார்கள். பப்புக்கு அவர்களின் பாசம் கிடைக்காததால் சோகமானது.

சரி, அவர்கள் தான் தன்னிடம் விளையாடவோ கொஞ்சவோ செய்யவில்லை என்பதை புரிந்து கொண்ட பப்பு மற்ற நாய்களுடன் சென்று விளையாடலாம் என முடிவெடுத்து அங்கிருந்த நாய் கூட்டத்திற்குள் ஜாலியாக உள்ளே நுழைய அதில் இருந்ததில் ஒரு பெரிய நாய் பப்புவை பார்த்து கோவமாக கத்தியது. எதுவும் புரியாத பப்பு என்கூட விளையாட வரமாட்டீங்களா என கேட்டது.

மேலும், பாத்தீங்களா என்கிட்ட மணி இருக்கு.. உங்கள்ல யார்கிட்டயாச்சும் இருக்கா? நான் தான் உங்களை விட கெத்து, அதான் எனக்கு மணி எல்லாம் போட்ருக்காங்க.. சரி வாங்க விளையாடலாம் என கேட்டது. மீண்டும் கோபப்பட்ட அந்த பெரிய நாய், முதலில் கூட்டத்தில் இருந்து தள்ளி நில். அப்புறம் இது ஒன்னும் உன்ன பெருமைபடுத்த மாட்டவில்லை. உன் தொல்லை தாங்காமல் நீ வந்தால் பாதுகாப்பாக இருக்க ராஜன் மாட்டியுள்ளார் என சொன்னதும் சோகமானது பப்பு. அது மற்றவர்களை எந்த அளவுக்கு தொல்லை கொடுத்துள்ளது என்பது அப்போதுதான் புரிய வந்தது. அதில் இருந்து யாரிடமும் வம்புக்கு போகாமல் பாசமாக பழகியது பப்பு.

ஆகையால் சுட்டீஸ் ஒருவரிடம் இருந்து அதிகப்படியான சலுகைகளை எதிர்பார்த்தால் அது பின்னாளில் நமக்கே வினையாக முடியலாம்.


மரம் வெட்டியின் பேச்சை கேட்டு.. மோசம் போன சிங்கம்!

 ஒரு பெரிய காட்டிற்கு பக்கத்திலே ஒரு கிராமம் இருந்து வந்ததது. அந்த கிராம மக்கள் தங்கள் உணவுக்கான தேவைகளை அருகில் இருந்த காட்டில் இருந்து எடுத்து தீர்த்து கொண்டார்கள். உதாரணமாக பழங்களை பறித்து கொள்ள, மரங்களை வெட்டி விறகுகளை விற்று தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.


மனிதர்கள் காட்டுக்குள் நடமாடுவது தெரிந்தும் விலங்குகளும் தங்களுடைய வாழ்க்கையை நேர்த்தியாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் வாழ்ந்து வந்தன. மக்கள் காட்டுக்குள் வந்தாலும் அவர்களை தாக்குவதில்லை. அதனால் மக்களும் விலங்குகளிடத்தில் எந்த அச்சமும் இல்லாமல் இருந்தார்கள். காட்டுக்குள் எப்போது வேண்டுமென்றாலும் போய் வந்தார்கள். விலங்குகளும் கிராமத்திற்குள் அவ்வவ்போது நடமாடும்.

அந்த கிராமத்தில் ஒரு ஏழை மரவெட்டி வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் தனது தந்தையுடன் விறகுகளை எடுத்துவர உதவியாக இருப்பாள். மிகவும் அழகானவள் மற்றும் அன்பானவள். ஒருநாள் தந்தையுடன் காட்டில் இருந்து விறகு எடுத்து வர சென்றாள். அப்போது அந்த பக்கமாய் சென்ற சிங்கம் மரவெட்டியின் மகளை கவனித்தது.


ஒரு நொடி நின்று அவளை பார்த்த சிங்கத்திற்கு அவளின் அழகின் மேல் ஆசை ஏற்பட, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததது. மறுநாளே மரவெட்டியின் வீட்டிற்கு சென்று உன் மகளை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என பெண் கேட்டது. பதறிப்போன மரவெட்டி, தன் பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்து கொண்டே ஒரு காட்டின் அரசனே என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றான்.


ஆர்வம் அதிகமாகி, என்னவாக இருக்கும் என யோசித்துகொண்டே சிங்கம் மரவெட்டியை பார்க்க, சிங்கத்திடம் இருந்து தன் மகளை காப்பாற்ற ஒரு வேண்டுகோல் வைத்தான். அதாவது நீங்கள் ஏற்கனவே அரசராக இருக்கிறீர்கள், ஆகையால் உங்களுக்கு பயந்து தான் இங்கு அனைவரும் இருக்கிறார்கள். அதனால் உங்கள் தலையில் இருக்கும் இந்த படர்ந்த முடியை வெட்டி , பயங்கரமாக தெரியும் இந்த பற்கள் மற்றும் உங்கள் நகங்கள் என அவற்றையும் வெட்டி நேர்த்தியாக வந்தால் என் பெண்ணை மணமுடித்து தருகிறேன் என்றான்.

சிங்கம் தான் விருப்பப்பட்ட பெண் கிடைக்க போகிறது என சந்தோஷத்தில் திரும்பி சென்று மரவெட்டி சொன்னது போலவே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறோம் என நினைத்து கொண்டு மறுநாள் மரவெட்டி வீட்டிற்கு வந்தது. மரவெடியை அழைத்து நீ கேட்டது போலவே நான் அனைத்தையும் செய்துவிட்டேன். இப்போது உன் பெண்ணை திருமணம் முடித்து கொடு என்று கேட்க, பல்லில்லாத சிங்கத்தை பார்த்த மரவெட்டி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தே விட்டான். புரியாமல் விழித்து கொண்டிருந்த சிங்கத்தை ஒரு கட்டையை கொண்டு அடித்தே துரத்தினான். உனக்கு என் மகள் வேணுமாடா என பயங்கரமாக அடித்து விரட்டினான். தன்னை அந்த மரவெட்டி ஏமாற்றியதை நினைத்து மனம் நொந்து அங்கிருந்து சிங்கம் கிளம்பியது.

ஆகையால் குழந்தைகளே நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் உங்களுக்கு ஒத்துவராத சிலவற்றில் தலையிடாமல் இருப்பதே சால சிறந்தது.


Friday, August 9, 2024

மருமகள் வாக்கு-கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன் நம்பி (நன்றி : ஸ்நேகா பதிப்பகம் வெளியீடு. )

மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது.

சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கரியக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்கும் பால் வார்த்துக்கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான்.

மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் கால்படிப் பாலை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள். ரொக்கந்தான். கடனுக்குத்தான் இந்தக் கடங்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே!

மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல. இருந்த வீட்டுக்கும், ஊரடியில் அறுபத்தாறு சென்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுக்கா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்குக் கிரயம் முடித்து வைத்த சொத்து இது. ராமலிங்கம் ஒரே பையன், ஸாது. தகப்பன் வேலையைப் பாவம் பார்த்துப் பையனுக்கே சர்க்கார் போட்டுக் கொடுத்துவிட்டது அவனுடைய அதிர்ஷ்டந்தான். கல்யாணமும் பண்ணி வைத்துவிட்டாள் மீனாட்சி அம்மாள். தள்ளாத வயதில் உதவிக்கு ஒரு மருமகள் வேண்டும் அல்லவா?

ருக்மிணி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை எல்லா வேலைகளையும் அவள் அப்பழுக் கில்லாமல் செய்துவிடுவாள். சமையலில் அவளுக்கு நல்ல கை மணம். வெறும் வற்றல் குழம்பும் கீரைக் கறியும் பண்ணிப் போட்டால் கூடப் போதும்; வாய்க்கு மொரமொரப்பாக இருக்கும். (மாமியார்கள் எப்போதும் ஏதேனும் குற்றம் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லாம் மருமகள்காரிகள் திருந்து வதற்கும் மேலும் மேலும் முன்னேறுவதற்கும் தானே.)

ருக்மிணிக்கு பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் நெஞ்சு வலிக்கும் என்று பக்கத்து வீட்டுப் பெண்கள் சொல்வதுண்டு. ஆனால் பலரும் பேசுவார்கள்; ஒன்றையும் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது, பதில் பேசவும் கூடாது. ஏன் யாரிடமும் எதுவுமே பேசாமலிருப்பது ரொம்ப ரொம்ப உத்தமம். நாம் உண்டு, நம் காரியம் உண்டு என்று இருந்துவிட வேண்டும். இப்படி, மருமகள் வந்த அன்றே மாமியார் புத்திமதிகள் கூறியாகிவிட்டது. மேலும், கல்யாணத்துக்கு முன்பே ருக்மிணிக்கு லேசாக மார்வலியும் இறைப்பும் உண்டு. டாக்டர்கள் அவளைப் பரிசோதித்திருந்தால் `டிராபிகல் ஈஸ்னோபீலியா’ என்றிருப்பார்கள். ஆனால் ஏன் அப்படிப் பரிசோதிக்க வேண்டும்? வைத்தியம் செய்கிறேன் என்று வருகிறவர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களுக்குக் காசு ஒன்றுதான் குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாதா? அவள் வயசு என்ன? அநுபவம் என்ன? ஒரு குழந்தை பிறந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லி விட்டாள். அவள் மட்டுமல்ல; டாக்டரிடம் போவதற்கு இங்கு யாரும் சாகக் கிடக்கவில்லையே?

மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா? ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.

ருக்மிணியும் மாமியாரும் என்றுமே சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். பரிமாறியபடியே, `பெண்டிற்கழகு உண்டி சுருக்குதல்’ என்று மீனாட்சி அம்மாள் அட்சரச் சுத்தத்துடன் கணீரெனக் கூறுகையில், அந்த அரிய வாக்கை மீனாட்சி அம்மாளே அவளது சொந்த அறிவால் சிருஷ்டித்து வழங்குவதுபோல் தோன்றும் ருக்மிணிக்கு. மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டுவிடும் என்று மாமியார் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று மருமகள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. (ரொம்பவும் பொறுக்க முடியாமல் போய், யாரும் அறியாதபடி ருக்மிணி அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றது இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில்தான்.)

மருமகள் என்று வருகிறவர்களின் வாயைக் கிளறி எதையாவது பிடுங்கிக்கொண்டு போய், மாமியார்க்காரிகளிடம் கோள்மூட்டிச் சண்டை உண்டாக்கி வேடிக்கை பார்க்காவிட்டால் ஊர்ப் பெண்களுக்குத் தூக்கம் வராதல்லவா? ஆனால், ருக்மிணியிடம் அவர்கள் வித்தைகள் எதுவும் செல்லுபடியாகாமல் போனது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. சதா வீட்டோடு அடைந்து கிடக்கும் போது அவள் எப்போதாவது கோவிலுக்கோ குளத்துக்கோ அனுப்பப்படும்போது, அவளை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடிய பெண்கள் இப்போது ஓய்ந்து, `இந்தப் பெண் வாயில்லாப் பூச்சி’ என்று ஒதுங்கிக்கொண்டு விட்டார்கள்.

இரவு நேரத் திண்ணை வம்புகளின்போது, ``மாட்டுப் பெண் எப்படி இருக்கா?’’ என்று துளைக்கிறவர்களிடம், ``அவளுக்கென்ன, நன்னார்க்கா’’ என்று மேல் அண்ணத்தில் நா நுனியை அழுத்திப் பதில் சொல்லி அடைத்துவிட்டு அடுத்த விஷயத்துக்கு நகர்ந்து விடுவாள் மீனாட்சி அம்மாள். ``அவளா? அவளை ஜெயிக்க யாரால் முடியும்?’’ என்பார்கள் ஊர்ப் பெண்கள், ஒருவித அசூயையுடன்.

தேர்தலுக்கு முன்தின இரவுப் பேச்சுக் கச்சேரியில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபட்டதில் ஆச்சரியம் இல்லை. மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், ``ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. ``ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?’’ என்றாள் மீனாட்சி அம்மாள். ``ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. ``பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

காலையில் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவும் மதியத்துக்கு மேல் ரொம்பச் சுறுசுறுப்பாகவும் இருந்தது. மீனாட்சி அம்மாள் முதல் ஆளாகப் போய் வோட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டாள். வீட்டிலிருந்து கூப்பிடுகிற தூரத்தில் ஆற்றுக்குப் போகிற வழியில் இருக்கிற தொடக்கப் பள்ளிதான் சாவடி. ராமலிங்கம் குளித்துவிட்டுத் திரும்புகிற வழியில் ஆட்கள் பிடித்திழுக்க, ஈரத் துணியோடு அவன் வோட்டளிக்கும்படி ஆயிற்று.

மத்தியான்ன உணவுக்குப் பிறகு வழக்கமாகிவிட்ட சாப்பாட்டு மயக்கத்தில் மீனாட்சி அம்மாள். தாழ்வாரத்து நிலைப்படியில் தலைவைத்துப் படுத்துக் கிடந்தாள். ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்டிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அது சுமட்டுக் கட்டுக்கு ஒரு கட்டுப்புல் தின்று தீர்த்திருந்தது. அது குடிப்பதையும் தின்பதையும் பார்த்துக்கொண்டே இருப்பது ருக்மிணியின் மிகப்பெரிய சந்தோஷம்; மாமியாரின் அதிகார எல்லைகளுக்கு வெளியே கிடைக்கிற சந்தோஷம். ``சவமே, வயத்தாலிக் கொண்டே எம்பிட்டுத் தின்னாலும் ஒம் பசி அடங்காது’’ என்று பொய்க் கோபத்துடன் அதன் நெற்றியைச் செல்லமாய் வருடுவாள். ``மாடுன்னு நெனைக்கப்படாது, மகாலக்ஷ்மியாக்கும்! ஒரு நாழி கூட வயிறு வாடப்படாது; வாடித்தோ கறவையும் வாடிப் போயிடும். கண்ணும் கருத்துமாக் கவனிச்சுக்கணும்’’ என்பது மீனாட்சி அம்மாளின் நிலையான உத்தரவு. ``பசுவே, நீ மட்டும் பெண்டிர் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடையாதா சொல்லு!’’ என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வரும். அதன் கழுத்துத் தொங்கு சதையைத் தடவிக் கொடுப்பதில் அவளுக்குத் தனியான ஆனந்தம், அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள்மேல் ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். ``நான் இன்னிக்கு ஓட்டுப் போடப் போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. செல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அதுமாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’

வாளியில் தண்ணீர் தணிந்து விடவே, குடத்திலிருந்து மேலும் தண்ணீரைச் சரித்துத் தவிடும் அள்ளிப் போட்டாள். அதற்குள் பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக்கொண்டு அப்படியே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்கவே, எரிச்சலுடன் அதன் வாயிலிருந்து வைக்கோலை அவள் பிடுங்கி எறியவும், வாளி ஒரு ஆட்டம் ஆடித் தண்ணீர் சிந்தியது. ``சவமே, எதுக்கு இப்படிச் சிந்திச் செதறறாய்? தேவாளுக்காச்சா, அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக் குடியேன்’’ என்று அதன் தாடையில் ஒரு தட்டுத் தட்டினாள். அது இடம் வலமாய்த் தலையை ஆட்டி அசைக்க, தவிட்டுத் தண்ணீர் பக்கங்களில் சிதறி ருக்மிணியின் மேலும் பட்டது. அவள் புடைவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

பசு இப்போது தண்ணீரை உறியாமல் வாளியின் அடியில் வாயைத் தணித்து, பிண்ணாக்குக் கட்டி ஏதாவது கிடைக்காதா என்று துழாவ, தண்ணீரின் மேல்மட்டத்தில் காற்றுக் குமிழிகள் சளசளவென வெளிப்பட்டன. மூச்சு முட்டிப் போய் முகத்தைச் சடக்கென அது வெளியே எடுத்து, தலையை மேல்நோக்கி நிமிர்த்தி, முசு முசென்றது. அதன் முகத்தைச் சுற்றி விழுந்திருந்த தவிட்டு வளையத்தைப் பார்க்க அவளுக்குச் சிரிப்பு வந்தது. ``கேட்டாயா, பசுவே! நீ இப்போ மட்டும் இப்படிக் கறந்தாப் போறாது. எனக்குக் கொழந்தை பொறந்தப்புறமும் இப்படியே நெறயக் கறந்துண்டிருக்கணும். எங் கொழந்தை ஒம் பாலைக் குடிக்க வேண்டாமா? ஒங்கொழந்தை குடிக்கற மாதிரி எங்கொழந்தையும் ஒம் மடீல பால் குடிக்க சம்மதிப்பியோ? எங்காத்துக்காரர் சொல்றாப்லே, எனக்குத் தான் மாரே கெடையாதே. மார்வலிதான் இருக்கு. மாரில்லாட்டாப் பாலேது? ஆனா, நிச்சியமா எனக்கும் கொழந்தை பொறக்கத்தான் போறது. பெறப் போறவள், எங்க மாமியார் சொல்றாப்லே, எப்பவாவது ஒரு தரம் படுத்துண்டாலும் பெறத்தான் செய்வாள். பெறாதவ என்னிக்கும் பெறப் போறதில்லை. யுத்தத்திலே செத்துப் போனானே எங்கண்ணா மணி, அவன்தான் எனக்குப் பிள்ளையா வந்து பொறக்கப் போறான். தெரியுமா ஒனக்கு? கொம்பக் கொம்ப ஆட்டு. ஓரெழவும் தெரியாது ஒனக்கு. நன்னாத் திம்பாய்!’’ பசு பொத் பொத்தென்று சாணி போட்டு, ஒரு குடம் மூத்திரத்தையும் பெய்தது. உடன் அவளே அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாகவமாக அள்ளிக் கொண்டுபோய்ச் சாணிக் குண்டில் போட்டுவிட்டு வந்தாள். புல்தரையில் கையைத் துடைத்துவிட்டு, மிகுந்திருந்த தண்ணீருடன் வாளியையும் குடத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். பசு அவளை நிமிர்ந்து பார்த்து, `ம்மா’ என்று கத்திற்று. ``போறேன், போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து கன்னுக்குட்டியைக் குடிக்க விடறேன். மணி மூணுகூட இருக்காதே. அதுக்குள்ள ஒனக்கு அவசரமா?’’ பால் கட்டி மடி புடைத்துக் காம்புகள் தெறித்து நின்றன.

மீனாட்சி அம்மாள் சொல்லி வைத்திருந்தபடி, பக்கத்து வீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியையும் சாவடிக்கு அழைத்துச் செல்ல, இருப்பதில் நல்ல உடைகளணிந்து வந்திருந்தனர். கிணற்றடியில் கை, முகம் எல்லாம் கழுவிக்கொண்டு ருக்மிணி வீட்டுக்குள் வந்தாள். ``சரி, சரி, தலய ஒதுக்கிண்டு, நெத்திக்கிட்டுண்டு பொறப்படு’’ என்று மாமியார் முடுக்கவும், ருக்மிணி அலமாரியைத் திறந்து சிறிய சிறிய பச்சைப் பூக்கள் போட்ட ஒரு வாயில் ஸாரியைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு மறைவுக்காக ஓடினாள். முகத்தின் மூன்றில் ஒரு பங்கு தெரிகிற கையகல வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, சீப்பு சமயத்துக்குத் தட்டுப்படாமல் போனதால் விரல்களாலேயே முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டு, நெற்றியில் ஏதோ ஒரு இடத்தில் குங்குமம் வைத்துக்கொண்டு வாசல் பக்கத்துக்கு ஓடோடியும் வந்தாள். வந்திருந்த பெண்களில் ஒருத்தி மீனாட்சி அம்மாள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ``ஏண்டி, எம்பிட்டு நேரம்டீ?’’ என்று கேட்கவும் ருக்மிணிக்குத் துணுக்கென்றது. ``தலயக் கூடச் சரியா வாரிக்காமன்னா ஓடிவரேன்’’ என்று அவள் அடைக்கிற குரலில் பதில் சொல்லி முடிப்பதற்குள், ``சரி, சரி, கிளம்புங்கோ!’’ என்று எல்லாரையும் தள்ளிவிட்டாள் மாமியார் அம்மாள். படி இறங்கியவளைக் கையைத் தட்டி, ``இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, ``ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப்படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத போ’’ என்றாள்.

சாவடி அமைதியாக இருந்தது. பல வளைவுகளுடன் ஒரு பெண் வரிசையும் சற்று நேராக ஓர் ஆண் வரிசையும். பெண் வரிசையின் நீளம் சிறிது அதிகம். வர்ணங்கள் நிறைந்த பெண் வரிசை மலர்கள் மலிந்த ஒரு கொடி போலவும் ஆண் வரிசை ஒரு நெடிய கோல் போலவும் தெரிந்தன. வோட்டளித்து வெளிவந்த சில ஆண் முகங்களில் தந்திரமாய் ஒரு காரியம் நிகழ்த்தி விட்ட பாவனை தென்பட்டது. ஒரு சாவுச் சடங்கை முடித்து வருவது போல் சில முகங்கள் களையற்று வெளிப்பட்டன. அநேகமாய், பெண்கள் எல்லாருமே மிதமிஞ்சிய, அடக்கிக்கொள்ள முயலும் சிரிப்புகளுடன், பற்களாய் வெளியே வந்தனர். ருக்மிணிக்கு ரொம்பச் சந்தோஷம். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது.

அந்தப் பள்ளிக் காம்பவுண்டுக்குள் செழிப்பாக வளர்ந்து நின்ற வேப்பமரங்களை அவள் மிகவும் விரும்பி நோக்கினாள். வெயில் மந்தமாகி, லேசுக் காற்றும் சிலுசிலுக்க, அது உடம்பை விட மனசுக்கு வெகு இதமாக இருப்பதாய் அவள் உணர்ந்தாள். கண்ணில் பட்டதெல்லாம் அவளைக் குதூகலப்படுத்திற்று. `இன்னிக்கு மாதிரி என்னிக்காவது நான் சந்தோஷமா இருந்திருக்கேனா?’ என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆ! அதோ அனிசமரம்! ஒரு கோடியில், ஒரு கிணற்றடியில் ஒற்றைப்பட்டு அது நிற்கிறது. அது அனிச மரந்தானா? ஆம், சந்தேகமே இல்லை. வேம்பனூரில்தான் முதல் முதலாக அவள் அனிசமரத்தைப் பார்த்தாள். அதற்குப் பின் இத்தனை வருஷங்களில் வேறு எங்குமே அவள் பார்க்கவில்லை. உலகத்தில் ஒரே ஒரு அனிசமரந்தான் உண்டு; அது வேம்பனூர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தவள் இவ்வூரில் இன்னொன்றைக் கண்டதும் அதிசயப்பட்டுப் போனாள். ஒருகால் அந்த மரமே இடம் பெயர்ந்து இங்கே வந்துவிட்டதா? ஆ! எவ்வளவு பழங்கள்! ருக்மிணிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அனிசமரம், அனிசமரம் என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. அனிசம்பழம் தின்று எவ்வளவு காலமாகிவிட்டது! அதன் ருசியே தனி!

வேம்பனூரில் அவள் ஐந்தாவது வரை படித்தபோது எத்தனை பழங்கள் தின்றிருப்பாள்! கணக்கு உண்டா அதற்கு? பையன்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அவள் மரத்தில் ஏறுவாள். இரு தொடைகளும் தெரியப் பாவாடையைத் தார்பாய்ச்சிக் கட்டிக் கொள்வாள். மரம் ஏறத் தெரியாத அவளுடைய சிநேகிதிகள், `ருக்கு, எனக்குப் போடுடி, எனக்குப் போடுடி’ என்று கத்தியபடி கீழே அண்ணாந்து, நிற்க, மரத்தின் உச்சாணிக் கிளைகளில் இருந்தபடி பழம் தின்று கொட்டைகள் துப்பி மகிழ்ந்ததை நினைத்தபோது அவளுக்குப் புல்லரித்தது. கண் துளிர்த்தது. புளியங்கொட்டை ஸாரும் சள்சள் ஸாரும் ஞாபகம் வரவே அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. பாவம், அவர்கள் எல்லாம் செத்துப் போயிருந்தாலும் போயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள். மீண்டும் சின்னவளாகிப் பள்ளிக்குப் போக முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு!

மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ருக்மிணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அனிசமரத்தின் ஒரு நுனிக்கிளையில் ஒரு பச்சைக்கிளி சிவந்த மூக்குடன் பறந்து வந்து உட்கார்ந்து கிரீச்சிட்டது கிளை மேலும் கீழுமாக ஊசலாடியது. என்ன ஆச்சரியம்! `கிளியே, வா! நீ சொல்ல வேண்டியதில்லை. என் ஓட்டு உனக்குத்தான். முன்பே நான் தீர்மானம் செய்தாயிற்று. ஆனால், என் மாமியாரிடம் போய்ச் சொல்லிவிடாதே. பூனைக்குப் போடச் சொல்லியிருக்கிறாள் அவள். நீயே சொல்லு, கிளிக்குப் போடாமல் யாராவது பூனைக்குப் போடுவார்களா?. என் மாமியார் இஷ்டத்துக்கு வித்தியாசமாக நான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்ய, சொல்லு? சரி, இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கள் வீட்டுக்கு வாயேன். நீ எப்போது வந்தாலும் என்னைப் பார்க்கலாம். மாட்டுத் தொழுவத்தில் தான் இருப்பேன். இப்போது வரச் சௌகரியமில்லை என்றால் பின் எப்போதாவது வா. எனக்குக் குழந்தை பிறந்த பிறகு வந்தாயானால் ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். என் குழந்தையும் உன் அழகைப் பார்ப்பான் அல்லவா? வரும்போது, கிளியே, குழந்தைக்குப் பழம் கொண்டு வா!’

ருக்மிணி அன்றுவரை கியூ வரிசைகளைக் கண்டவள் இல்லை. இது அவளுக்குப் புதுமையாகவும் ஒரு நல்ல ஏற்பாடாகவும் தெரிந்தது. ரெயில் மாதிரி நீளமாக இருந்த வரிசை இப்போது குறுகிப் போய்விட்டதே! ஆண்கள் ஏழெட்டுப் பேரே நின்றனர். சாவடி அவள் பக்கம் வேகமாக வந்துகொண்டிருந்தது. அவளுக்கு முன்னால் எட்டொன்பது பேர் பெண்கள். தான் அறைக்குள் பிரவேசித்ததும் வேற்று ஆண்களின் அருகாமை அவளுக்குக் கூச்சத்தையும் ஒருவகை மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணிற்று. யாரையும் நிமிர்ந்து பாராமல், சுற்றியிருப்பவற்றை மனசில் கனவுச் சித்திரமாக எண்ணிக்கொண்டு முன் நகர்ந்தாள்.

இளம் கறுப்பாய் மயிர் இன்றிக் கொழுகொழுவென இரு கைகள், ஒரு நீள் சதுர மேசையின் மேல் காகித அடுக்குகள், சிவப்பு, மஞ்சள் பேனா பென்சில்களுக்கிடையே இயங்க, அவளுக்கு ஒரு வெள்ளைச் சீட்டு நீட்டப்பட்டது. யார் யாருடையவோ கால்கள் குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகளிட்டன. ஒரு நாணயம் தரையில் விழுந்த சத்தம் காதில் விழுந்தது. கடைசியில் ஒரு ஸ்கிரீன் மறைப்புக்குள் எப்படியோ தான் வந்துவிட்டதை ருக்மிணி உணர்ந்தாள். அவளுக்குப் பின்னால் திரைக்கு வெளியே ஒரு பெண் சிரிப்பொலி தெறித்து, நொடியில் அடங்கிற்று. ருக்குவின் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. பொறுக்க முடியாதபடி மூத்திரம் முட்டிற்று. `ஸ்வாமி. என்ன அவஸ்தை இது!’ பற்கள் அழுந்தின. `ஐயோ, பால் கறக்க நேரமாயிருக்குமே’ என்ற நினைவு வர மடியில் பால் முட்டித் தெறிக்க மருகும் பசுவும், கட்டிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் `ம்மாம்மா’ என்று அவள் செவிகளில்அலறிப் புடைக்கலாயின. அவள் உடம்பு இப்படிப் பதறுவானேன்? மாரும் லேசாக வலிக்கிறது. ஆ, கிளி! கிளிக்கு எதிரே முத்திரை நெருங்கிவிட்டது. இப்போது ஒரு கை ருக்மிணியின் கையைப் பற்றவும், திடுக்கிட்டு, `யாரது?’ என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கில்லை. ஆனால், அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்தது என்னவோ நிஜந்தான். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான். கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்துவிட்டது. ஆ! ருக்மணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு!

பரபரவெனச் சாவடியை விட்டு வெளியேறினாள் அவள். அவளுக்காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், ``ருக்கு, யாருக்குடி போட்டே?’’ என்று ஒருத்தி கேட்க, ``எங்க மாமியாருக்கு’’ என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயிலிருந்தது வெளிப்படவும் கூடிநின்ற பெண்கள் பெரிதாகச் சிரித்தார்கள். ருக்மிணி தலையைத் தொங்கப் போட்டபடி, அங்கு நிற்காமல் அவர்களைக் கடந்து விரைந்து நடந்தாள். முன்னை விடவும் மார்பு வலித்தது. பொங்கி வந்த துக்கத்தையும் கண்ணீரையும் அடக்க அவள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

Thursday, August 1, 2024

படிதத்தில் பிடித்தது…யோசிப்போம் !

 #. நோய்க்கு முதல் மருந்து... தாய்!

#. முட்டாள்களில் பல ரகம். அதில் உயர் ரகம், அறிவாளி!

#. விருப்பம் இருந்தால், ஆயிரம் வழிகள். விருப்பம் இல்லாவிட்டால், ஆயிரம் காரணங்கள்!

#. எல்லாமே குற்றம் என்பவர்களுக்கு, ஏனோ குற்றம் சொல்வது மட்டும் குற்றமாகவே தெரிவதில்லை!

#. தொடர்ச்சியா சில உதவிகளைச் சிலருக்குச் செய்தால், அதை நம்ம கடமையாவே ஆக்கிருவாங்க ஒருநாள்!


#. சிலர் தேவைகளுக்காக மட்டுமே நம்மிடம் சிரித்துப் பழகுகிறார்கள் எனத் தெரிந்தும், பழகிக்கொண்டு இருக்கிறோம் நம் தேவைகளுக்காக!

#. உலக நடிப்பில் ஒரு வகை, விருந்தாளிகள் வீட்டில் இருக்கும்போது கணவனும் மனைவியும் காட்டும் அந்நியோன்யம்!

#. உங்க இஷ்டம் போலச் செய்ங்க! எனும் மனைவியின் அனுமதி, உண்மையில் அனுமதியே இல்லை!

#. வாதாட பலருக்குத் தெரியும். உரையாட ஒரு சிலருக்கே தெரியும்!

#. நம்பர் 1 என்பது ஜீரோவுக்கு மிக அருகில் இருப்பது!



#. முடியாது என்பதன் டெக்கரேட்டட் வெர்ஷன்தான் யோசித்துச் சொல்கிறேன்!

#. நோண்டி நோண்டிக் கேட்கப்படும் கேள்விகள்தான், தோண்டித் தோண்டி பொய் சொல்லவைக்கின்றன!

#. ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும். தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவது இல்லை.

#. பெண்கள் வெளியே கிளம்ப ஐந்து நிமிடம் என்றாலும், ஆண்கள் வீடு திரும்ப ஐந்து நிமிடம் என்றாலும் நம்பிடவே கூடாது!

#. அறிவும் மனமும் பேசி முடிவெடுத்து சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய் எடுப்பதற்குள், நம்மைக் கடந்துபோய்விடுகிறார்கள் பிச்சைக்காரர்கள்!



#. எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும்!

#. மார்கெட்ல என்ன காய்கறில்லாம் சீப்பா கிடைக்கும்னு ஹாஸ்டல் சாப்பாட்டை வெச்சே கண்டுபிடிச்சுரலாம்!

#. மனைவி... சமையல் பழகும் முன், மனைவியின் சமையல் பழகிவிடுகிறது!

#. பெண்கள் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறார்கள் கணவன் அமையும் வரை. ஆண்கள் எதிர்காலம்பற்றிக் கவலைப்படுவதே இல்லை மனைவி அமையும் வரை!

#. தாயிடம் உங்கள் பேச்சுத் திறமையைக் காட்டாதீர்கள். உங்களுக்குப் பேச்சு கற்றுக்கொடுத்ததே அவர்தான்!


#. அப்பாவும் மகளும் பேசுவது புரிதல்கள்; அம்மாவும் மகளும் பேசுவது ரகசியங்கள்!

#. ஹ்யூமர் சென்ஸ் உள்ள ஆணையும், ரூமர் சென்ஸ் உள்ள பெண்ணையும் பெண்களுக்கு எளிதில் பிடித்து விடுகிறது!

#. பெண்களின் SIGNATURE என்பது, பெயரை எழுதுவது; ஆண்களின் SIGNATURE என்பது, பெயரைக் கிறுக்குவது!

#. நோயுற்றோருக்கான முதலுதவி, மருத்துவர்களின் புன்னகை!

#. தூங்குவதுபோல் நடிப்பவர்கள் புரண்டு படுப்பது இல்லை!


#. கீ செயின் என்பது நாம் எல்லா சாவிகளையும் ஒரே சமயத்தில் தொலைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது!

#. ஃபிரிஜ் என்பது சற்றே காஸ்ட்லியான குப்பைத் தொட்டி!

#. உங்களை ஒருவர் விமர்சித்தால் உங்குக்குக் கோபம் வருதா? அப்படின்னா அந்த விமர்சனம் கரெக்டு!

#. உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் எனப் புரிகிறது!

#. வண்டியை மழையில நிறுத்தியிருந்தா சுத்தமாகும், ஓட்டிட்டுப் போனா அழுக்காகும் இவ்ளோதாங்க வாழ்க்கை!



#. இங்கு பதில் சொல்வது எதிர்த்துப் பேசுவதாகவே கருதப்படுகிறது!

#. நம்பினால் நம்புங்கள்... தீர்க்கமான பல முடிவுகள் ஜன்னலோரப் பயணங்களில் எடுத்தவையாகவே இருக்கும்!

#. பிறரைக் காயப்படுத்தும் என்று நான் வெளிப்படுத்தாத பல வார்த்தைகள் என்னைக் காயப்படுத்திக்கொட்டே இருக்கின்றன!

#. எந்த மகனும் தன் அம்மாவின் சமையலை, அம்மாவைத் தவிர யாரிடத்திலும் குறை சொல்வதில்லை!

#. நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்கத் தொடங்கும் முன், விலகி நிற்கக் கற்றுக் கொள்வது சிறந்தது.


#. உண்மை சொன்னால் ஓராயிரம் கேள்வி கேட்பதும், பொய் சொன்னால் நம்புவதும் மனைவி மட்டும்தான்!

#. வாய் தவறிய வார்த்தைகள் மட்டும் எப்படியோ சரியாகப் போய்ச் சேர்ந்துவிடுகின்றன!

#. பிரச்னைகளைச் சிலர் தைரியமாகவும் சிலர் புன்னகையுடனும் சிலர் கண்டுகொள்ளாததுபோலவும் எப்படியோ கையாண்டு விடுகின்றனர்.

#. ஏற்றிவிடுபவர்களைவிட, ஏத்திவிடுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்!

#. தூக்கி எறியப்படும் தருணங்களில்தான், சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது.



#. சொந்தக் கால்ல நிக்கிறப்போதான் தோணுது, முன்னாடி நம்மைத் தாங்கியவர்களுக்கு எம்புட்டு வலிச்சிருக்கும்னு!

#. நாம் சொன்ன ஒரு பொய் உலகுக்குத் தெரியவரும்போது, நாம் சொன்ன அத்தனை உண்மைகளும் சந்தேகத்துக்கு இடமாகின்றன!

#. நேரத்தைச் சேமிக்க வந்ததாக நினைக்கும் கைபேசியும் இணையமும்தான் அதிக நேரத்தைத் தின்கின்றன!

#. நீ யாரையாவது ஏமாற்றிவிட்டால் அவர்கள் ஏமாந்துவிட்டதாக அர்த்தம் இல்லை, உன்னை அளவுக்கு அதிகமாக நம்பி இருக்கிறார்கள் என்று அர்த்தம்!

#. உணவகங்களில் பணி செய்யும் வடகிழக்கு இந்தியர்கள் முகம் சுழித்தோ, கோபமுற்றோ கண்டதில்லை. அது இயல்பா, வறுமையின் வெளிப்பாடா தெரியவில்லை!



#. கணவன் அடிச்சா நாளிதழ்ல செய்தியா போடறாங்க. மனைவி அடிச்சா வார இதழ்ல ஜோக்கா போடறாங்க!

#. ஏன் போன் எடுக்க இவ்ளோ நேரம்? என்பதில் வெட்டியாத்தானே இருக்க? என்பதுவும் அடக்கம்!

#. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நாலு வகையான சட்னி கிடைக்குது. நேத்து வெச்சது, முந்தாநாள் வெச்சது, காலைல வெச்சது!

#. பக்கத்தில் ஆண்கள் இல்லாதபோது, பெண்கள் கரப்பான்பூச்சிகளுக்குப் பயப்படுவது இல்லை!

#. ஆண்கள் ஒரு கட்டத்தில் மேக்கப்பைக் கைவிட்டுவிடுகிறார்கள்; பெண்களை ஒரு கட்டத்தில் மேக்கப் கைவிட்டுவிடுகிறது!


#. செய்யும் செயல் யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைத்தால், நீங்கள் நிச்சயமாகத் தவறு செய்கிறீர்கள் என்று கொள்க!

#. கீழே விழுந்ததும் இயல்பாக எழுந்து நடக்கும் குழந்தையைக் கவனித்தாலே, வெற்றிக்கான ஃபார்முலா கிடைக்கும்!

#. அழகா இருந்தா கான்ஃபிடென்ஸ் வருமானு தெரியாது; ஆனா, கான்ஃபிடென்ட்டா இருந்தா, அழகும் வந்துரும்!

#. ஒரு பெண் தன் அப்பாவை அறிவாளியாகவும், தன் பிள்ளையின் அப்பாவை முட்டாளாகவும் கற்பனை செய்கிறாள்!

#. அபராதம் என்பது தவறாக நடந்து கொண்டதற்குச் செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்து கொண்டதற்குச் செலுத்தப்படும் அபராதம்!



#. கொஞ்சம் படித்தால், சொந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறுகிறோம். நிறையப் படித்தால், சொந்த நாட்டைவிட்டே வெளியேறுகிறோம்!

#. இறப்பதுபோல கனவு கண்டவர் உண்டு. எவரேனும் பிறப்பதுபோல கனவு கண்டது உண்டா?

#. பிடித்ததுபோக வரும் சம்பளம், யாருக்கும் பிடிப்பது இல்லை!

பழ மொழிகள்

1. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
2. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
3. தன்னை போல் பிறரை நினை.
4. அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது.
5. இறந்த காலத்தை என்றும் பெற இயலாது.


6. காலம் பொன் போன்றது.
7. உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.
8. நிறைகுடம் ததும்பாது, குறைகுடம் கூத்தாடும்.
9. எலி வலையானாலும், தனி வலை ஆகாது.
10. இறைக்கிற ஊற்றே சுரக்கும்.


11. எறும்பு ஊர கல்லும் தேயும்.
12. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
13. ஐந்தில் விளையாதது, ஐம்பதில் வளையாது.
14. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்.
15. ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்.


16. கரும்பு தின்ன கூலிவேண்டுமா?
17. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
18. யானைக்கும் அடி சறுக்கும்.
19. ஆற்றில் போட்டாலும் அளந்துபோட வேண்டும்.
20. கெடுவான் கேடு நினைப்பான்.


21. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
22. தோல்வியே வெற்றியின் முதல் படி.
23. பட்டகாலிலே படும். கெட்ட குடியே கெடும்.
24. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
25. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு.


26. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
27. ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
28. பதறாத காரியம் சிதறாது.
29. குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு.
30. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.


31. நெருப்பு இல்லாமல் புகையுமா?
32. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
33. சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது.
34. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.
35. நூலை போல சேலை, தாயை போல பிள்ளை.



36. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

37. எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம். 

உலக மொழிகள்

  • கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழை – ஸ்பெயின்

  •  எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும் – ஸ்காட்லாந்து

  • பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான் – ஜேர்மன்

  • தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல் – ருமேனியா

  • பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும் – துருக்கி

பொன்மொழி

 கோல்டுஸ்மித்


1. எப்போதும் அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒரு முறை சந்திப்பது மேல்.


ஆஸ்கர் ஒயில்டு


1. தனியறையில் செய்யும் ஒவ்வொரு ரகசிய தவறுக்கும் என்றாவது ஒருநாள் கூரை மேலிருந்து கதறியழ நேரிடும்.


ஜீவா


1. பட்டப்படிப்பு புட்டிப்பால் போன்றது. சிந்தனை பசும்பால் போன்றது. அனுபவம் தாய்ப்பால் போன்றது.


செனகா


1. ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை. நாம் பயப்படுவதால்தான் அது கஷ்டமாகிறது.


கண்ணதாசன்


1. குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் தான் முடிவு செய்கிறது.
2.
சோதனை அதிகமாக இருந்தால், சுகம் பெரிய அளவில் வரப் போகிறது என்று அர்த்தம்.


எமெர்சன்


1. நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் என்னை விட உயர்ந்தவராகவே இருக்கிறார்கள். அதை நான் கற்றுக்கொள்கிறேன்.
2.
யாரிடம் உன் எண்ணங்களை வெளிப்படையாக சொல்ல முடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன்.


சாக்ரடீஸ்


1. உலகை மாற்ற நினைப்பவன் முதலில் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வேண்டும்.
2.
இப்போது செய்வதைவிட இன்னும் சிறப்பாக பணியாற்றும் சிறப்பும் வாய்ப்பும் இருந்தும் அப்படி செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
3.
நாம் மற்றவருக்கு சிந்திக்க செய்யவே முடியும். கற்பிக்க முடியாது. அவரவர் அனுபவமே சிறந்த ஆசான்.


அரிஸ்டாட்டில்


1. கல்விக்கான வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை.
2.
வாழ்க்கையில் எதிர்ப்படும் துன்பங்களை எதிர்கொள்வதற்கு நண்பர்களே உற்ற துணையாவர்.


அபிரகாம் லிங்கன்


1. ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது.


ஜான் கீட்ஸ்


1. அனுபவிக்கும் வரை எதுவும் உண்மையாகாது.


ஜார்ஜ் எலியட்


1. மரியாதையாகப் பேசுவதும், நடப்பதும் செல்லவில்லாத செல்வங்கள்.


பிராங்ளின்


1. விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால் சங்கடங்கள் இரு மடங்காகும்.
2.
முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது, அறிவாளியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது.
3.
நான் மற்றவர்களைப் பற்றி பேசுவதென்றால் அவர்களின் நல்ல பண்புகளை எடுத்துரைப்பேனே அன்றி, ஒருபோதும் குற்றங்களை கூறுவதில்லை.


கென்னடி


1. ஏடுகளில் உள்ள கடுஞ் சொற்கள் அறிவை வளர்க்கும், பெரியோர்களின் கடுஞ்சொற்கள் நல்வாழ்வை வளர்க்கும்.


ஆவ்பரி


1. விதியானது ஒரு கதவை மூடும்போது நம்பிக்கையானது இன்னொரு கதவைத் திறக்கிறது.
2.
கொள்கையில் நம்பிக்கை வேண்டியதுதான், ஆனால் அது குருட்டுத்தனமாக இருக்கக் கூடாது.


ஜான்சன்


1. அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அறிவற்றவர்கள் அதிலும் கற்றுக்கொள்வதில்லை.


சாணக்கியர்


1. உன்னைப் பார்த்து பிறர் பொறாமைப்படுகின்றனர் என்றால், நீ வளர்ந்து வருகிறாய் என்று அர்த்தம்.


இந்திராகாந்தி


1. மனிதர்கள் தங்களின் கடமைகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் உரிமைகளை மட்டும் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள்.


நீல் ஆம்ஸ்ட்ராங்


1. மனிதர்கள் அனைவருக்கும் எண்ணற்ற முறை இதயம் துடித்துக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். என்னுடைய எந்த ஒரு துடிப்பையும் நான் வீணாக்க மாட்டேன்.


அம்பானி


1. இலக்குகளை சென்றடைவது மட்டும் போதுமானது அல்ல. அவற்றைத் தகர்த்து அடுத்த இலக்குகளை உருவாக்குவதே என் எதிர்பார்ப்பு.


மைக்கேல் ஜாக்சன்


1. போலி வேடங்களைப் போட்டுக்கொண்டு ஜெயிப்பதைவிட நம்முடைய சுய அடையாளங்களை கொண்டு தோற்பது மேல்.


ரத்தன் டாடா


1. எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எடுக்கும் முடிவுகளை சரியானதாக மாற்றிக் கொள்வேன்.


தாமஸ் கார்லைல்


1. குற்றம் குறைகளை நீக்கிக்க்கொள்வதே மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மிக்ப்பெரிய வாய்ப்பு.
2.
தன்னால் சாதிக்க முடியும் என்று கூறுபவனே அரசன் ஆவான்.


டென்னிஸன்


1. ஏளனம் என்பது பண்பற்றவர்களின் உள்ளத்தில் எழும் நச்சுப்புகை.


சுபாஷ் சந்திர போஸ்


1. நாணயமாக நடப்பவர்கள், ஒளிக்கும், இருளுக்கும் அஞ்சுவதில்லை.

 

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed