நாட்டின் அரசன் பக்கத்து நாட்டு இளவரசர்களுக்கு ஒரு ஓலை அனுப்ப அதில் தனது மகளுக்கு வரன் பார்ப்பதாகவும் தகுதியுள்ளவர்கள் அரண்மனையில் தங்கி விருந்து உண்டு செல்லலாம். இளவரசிக்கு யாரை பிடிக்குதோ அவரை மணம் முடிப்பார் என இருந்தது.
இந்த ஓலை கிடைத்த அரசர்கள், இளவரசர்கள் என பலரும் அந்த ராஜ்யத்திற்கு வந்தார்கள். அரண்மனைக்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் அவர்களை பார்த்து பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு விருந்து உபசரணைகளை செய்து கொடுத்தார். அவர் யார் என யாருக்கும் தெரியாததால் பணிப்பெண் என நினைத்து கொண்ட இளவரசர்கள் இளவரசிக்காக காத்து கொண்டிருந்தார்கள். ஆனால் முதல் நாள் இளவரசியை யாருமே காணவில்லை. மறுபடியும் ஒரு பெரிய மேலங்கியை அணிந்து வந்த அதே வயதான பெண்மணியை தான் அனைவரும் பார்த்தார்கள். அரசரை தேடி சென்று இளவரிசியை எப்போதுதான் காண்பிப்பீர்கள், வெகு தொலைவில் இருந்து நாங்கள் வந்துள்ளோம் என கோவமாக கடிந்து கொள்ள, அரசரோ என் மகள் தினமும் உங்களை காண்கிறாள். நீங்கள் எப்படி பார்க்காமல் இருந்தீர்கள் என்று கேட்டார்.எது! இளவரசியா தினமும் ஒரு வயதான கிழவியை தான் பார்க்கிறோம். இங்கு எந்த இளவரசியும் இல்லை என்று சத்தமாக சொல்ல அரசர் தனது மகளை வரவழைத்தார். வந்தது அதே வயதான பெண்மணி தான். அதிர்ச்சி ஆன இளவரசர்கள் இதுதான் இளவரசியா என கோவமாக கேட்க ஆமாம் என்றார் அரசர். ஆத்திரமடைந்த இளவரசர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பினார்கள்.
அரசர் இதை எதையுமே பெரிதாக எடுத்து கொள்ளாமல், அடுத்த ஓலையை இன்னும் சில நாடுகளுக்கு அனுப்பினார். இந்த முறை இளவரசி அவர்களை வரும் வழியிலே பார்த்து பிச்சை கேக்கும் பெண்ணை போல நடந்து கொண்டாள். அவள் எதிர்பார்த்த மாதிரி யாருமே வரவில்லை. வந்தவர்கள் பெரும்பாலும் பிச்சை வேணுமா உனக்கு என அவளிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். அந்த நேரம் இளவரசன் ஒருவன் இவளை பார்த்ததும் பிடித்து கீழே தள்ளிவிட்டு அரண்மனை நோக்கி சென்றான். அங்கு விருந்தை உண்ண அமர்ந்தான். அவனுக்கு எல்லா உணவுகளுமே கசந்தது. கோவப்பட்டு எழுந்தவனை வயதான இளவரசி நீ ஒரு வயதான பிச்சைகாரிக்கு உணவளிக்க முடியவில்லை என்றால் உன்னால் ஒரு நாட்டு மக்களை எப்படி பார்த்துக்கொள்ள முடியும் என திட்டி அனுப்ப, அந்த சமயம் இன்னொரு இளவரசன் அரண்மனையில் நுழைகிறான்.
இளவரசி தேடும் ஒரு பண்பாளனாக தன்னை அவளிடம் நிலை நிறுத்தினான். அவள் வைத்த அறிவார்ந்த போட்டிகளில் இளவரசி எதிர்பார்த்த பதில்களை சொல்லி அசத்தினான். சரி கடைசி கேள்வி, ஏன் வயதான தோற்றமுடைய என்னை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என இளவரசி கேட்க, உங்கள் மனது வைரம் போன்றது. வெளி தோற்றம் பெரிய விஷயமே இல்லை, எங்கள் நாட்டில் கைதேர்ந்த மருத்துவர்கள் உள்ளார்கள் என்னால் சரியாக்க முடியும். இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை என சொல்ல, இளவரசி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். தந்தையிடம் சொல்லி திருமண விருந்தை ஏற்பாடு செய்தாள். இதற்குமுன் இவளை ஏளனமாய் பார்த்த அனைத்து இளவரசர்களையும் வரவழைத்தாள். மணப்பெண்ணாக தயார் ஆன இளவரசி, இளவரசனின் கைகளை பிடித்து கொண்டு அரண்மனையில் நடந்து வர பலரும் கேலி செய்து சிரித்தார்கள். அவள் அந்த மேலங்கியை கழட்டாமல் நடந்து வந்து மேடை ஏறியதும் தனது கணவர் மற்றும் மற்ற அரசர்கள் முன்னிலையில் அந்த மேலங்கியை கழட்ட அந்த இடமே அதிர்ச்சியில் உறைந்தது.
ஆமாம் இளவரசி தற்போது வயதான மூதாட்டி தோற்றத்தில் இருந்து அழகான இளம் பெண்ணாக மாறி இருந்தார். அந்த மேலங்கிக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது என அரசர் சொல்ல, அனைவரும் வாயடைத்து போனார்கள்.
No comments:
Post a Comment