Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal – 8

 

விடுகதை வினா விடைகள்

1) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

1) கத்தரிக்கோல்

2) நண்பர்

3) பகைவர்

4) கத்தி

 

2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

1) விளக்கு

2) துடைப்பம்/தும்புத்தடி

3) பேனா

4) பாத்திரம்

 

3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?

1) கற்பூரம்

2) விளக்கு

3) மெழுகுதிரி

4) ஊதுபத்தி

 

4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?

1) பஞ்சு

2) நுங்கு

3) வெண்மை

4) வாழை

 

5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

1) வைரக்கல்

2) விக்கல்

3) சிகிச்சை

4) மணல்

 

6) ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?

1) வீடு

2) கோயில்

3) தேன்கூடு

4) கூடு

 

7) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?

1) மீன்

2) வாத்து

3) தவளை

4) பாம்பு

 

8) படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?

1) நுளம்பு

2) கனவு

3) மனிதன்

4) வானம்

 

9) இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

1) பலா

2) மா

3) வாழை

4) தோடை

 

10) அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?

1) நாய்

2) பூனை

3) அரசன்

4) நாக்கு

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed