Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal – 7

 

விடுகதை வினா விடைகள்

1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?

1) ஓட்டை

2) மீன் வலை

3) கரண்டி

4) கடல்

 

2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?

1) கஸ்ட்டம்

2) ஆறுதல்

3) ஆபத்து

4) பயம்

 

3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?

1) பார்வை

2) கனி

3) கவிதை

4) கண்மணி

 

4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?

1) கண்கள்

2) முட்டை

3) மீன்

4) கடல்

 

5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?

1) சக்தி

2) சூரியன்

3) நிலா

4) பூமி

 

6) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

1) குரங்கு

2) மூச்சு

3) கடவுள்

4) மனிதன்

 

7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?

1) புடவை

2) பட்டு

3) நகை

4) ஆபரணம்

 

8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?

1) காசி

2) பழனி

3) கனி

4) திருச்செந்தூர்

9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?

1) அணிகலன்

2) துணி

3) ஆடை

4) பட்டுத்துணி

 

10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?

1) நீர்

2) நெல்

3) சோறு

4) அரிசி

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed