Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 5

 

21. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

விடை: கண்

22. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

விடை: விக்கல்

23. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?

விடை: செருப்பு

24. உணவு கொடுத்தால் வளரும் நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?

விடை: நெருப்பு

25.நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

விடை: தென்றல்

26. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?

விடை: வானம்

27. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?

விடை: குளிர்

28. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?

விடை: சூரியன்

29. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?

விடை: தொட்டா சுருங்கிச் செடி

30. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?

விடை: பம்பரம்

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed