Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 4

 

11. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?

விடை: மெழுகுவத்தி

12. ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?

விடை: இதயம்

13. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?

விடை: தலை முடி

14. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?

விடை: தேங்காய்

15. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?

விடை: இதயம்

16. உங்களுக்கு சொந்தமான ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?

விடை: பெயர்

17. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை, கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

விடை: வாழை

18. இவனும் ஒரு பேப்பர் தான் ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன?

விடை: பணம்

19. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

விடை: கொசு

20. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

விடை: தராசு

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed