1. அமைதியான பையன் ஆனால் அடிக்காமலேயே அழுவான் அவன் யார்?
விடை: ஐஸ் கட்டி
2. சின்னச் சின்ன அறைகள் உண்டு, இது வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும் சித்திரமும் அல்ல. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. கோட்டையும் அல்ல அது என்ன?
விடை: தேன் கூடு
3. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான்.. ஒருவன் நடப்பான் அவன் யார்?
விடை: கடிகாரம்
4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
விடை: உப்பு
5. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
விடை: குடை
6. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
விடை: மீன் வலை
7. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
விடை: தொலைபேசி
8. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
விடை: அலாரம்
9. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் – நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி
10. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?
விடை: நிலா
No comments:
Post a Comment