Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 2

1. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?

விடை: தராசு

2. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

விடை: வாழைப்பூ

3. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

விடை: விரல்கள்

4. இரவல் கிடைக்காததுஇரவில் கிடைப்பது அது என்ன?

விடை: தூக்கம்

5. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்

விடை: முட்டை

6. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன?

விடை: வாழைப்பூ

7. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?

விடை: கடிகாரம்

8. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?

விடை: எதிரொலி

9. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

விடை: இமை

10. காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?

விடை: முள்


No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed