Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 1

 

1. பிடுங்கலாம் நட முடியாது அது என்ன..? 

விடை: தலைமுடி

2. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்?

விடை: பந்து

3. யாரும் ஏறமுடியாத மரம், கிளைகள் இல்லாத மரம் அது என்ன?

விடை: வாழை 

4. ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய் கடை அது என்ன?

விடை: தேன்கூடு

5. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்..?

விடை: கரும்பு

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன..?

விடை: பட்டாசு

7. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் அவன் யார்

விடை: தண்டோரா 

8. வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?

விடை: ஆமை

9. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்

விடை: பூரி

10. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் அவன் யார்?

விடை: மோதிரம்

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed