Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal – 13

 

விடுகதை வினா விடைகள்

1) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்?

1) வெருளி

2) சிலந்தி

3) அட்டை

4) பாம்பு


2) அள்ள அள்ளக் குறையாது ஆனால் குடிக்க உதவாது அது என்ன ?

1) கடல்நீர்

2) வாளி

3) கயிறு

4) தீர்த்தம்


3) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம் அது என்ன?

1) கரும்பு

2) மாதுளம்பழம்

3) பலாப்பழம்

4) முட்டை


4) வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?

1) நாய்

2) தபாற் பெட்டி

3) வாகனம்

4) மரம்


5) முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார் ?

1) மாங்காய்

2) சிவபெருமான்

3) பலாப்பழம்

4) தேங்காய்


6) மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார் ?

1) மீனவன்

2) சிலந்தி

3) மீன்

4) சிலை


7) உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார் ?

1) பானை

2) காகம்

3) அகப்பை

4) நீர்


8) எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?

1) சூரியன்

2) வளி

3) நிலா

4) காற்று


9) வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன ?

1) தீக்குச்சி

2) தடி

3) மரம்

4) மேசை


10) சலசலவென சத்தம் போடுவான் சமயத்தில் தாகம் தீர்ப்பான் அவன் யார் ?

1) நீர்

2) கடல்

3) அருவி

4) தாகம்

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed