Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal – 14

 

விடுகதை வினா விடைகள்


1) காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?

1) நாவல் பழம்

2) மாம்பழம்

3) தேங்காய்

4) பனை


2) தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?

1) தேங்காய்

2) அரிசி

3) சக்கரை

4) சட்டி


3) ஒரு கிணற்றில் ஒரே தவளை அது என்ன ?

1) காகம்

2) நாக்கு

3) மூக்கு

4) பேன்


4) வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான் அது என்ன ?

1) நூல்

2) பறவை

3) பட்டம்

4) விமானம்


5) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் அது என்ன ?

1) சீனி

2) மூங்கில்

3) வெல்லம்

4) கரும்பு


6) பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன ?

1) மிளகாய்

2) காசு

3) அன்னாசி

4) மாதுளம்பழம்


7) கண்ணுக்குத் தெரியாதவன் உயிருக்கு உகந்தவன் அவன் யார் ?

1) பேய்

2) காற்று

3) தூசு

4) நீர்


8) தலையைச் சீவினால் தாளிலே மேய்வான் அவன் யார்?

1) வெண்கட்டி

2) பேனா

3) பென்சில்

4) ஆடு


9) சுற்றுவது தெரியாது ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான் அவன் யார் ?

1) வானம்

2) பூமி

3) பம்பரம்

4) காற்றாடி


10) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் அது என்ன ?

1) பல்

2) பலாப்பழம்

3) முட்டை

4) மிளகாய்

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed