Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal – 12

 

விடுகதை வினா விடைகள்


1) வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன ?

1) விருந்தினர்

2) மாணவர்

3) செருப்பு

4) அன்பளிப்பு

 

2) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன ?

1) குட்டை

2) கடல்

3) குளம்

4) கிணறு

 

3) மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார் ?

1) குயில்

2) தேவாங்கு

3) உடும்பு

4) அணில்

 

4) வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்?

1) கதவும் தச்சனும்

2) முதலாளியும் நாயும்

3) பூட்டும் சாவியும்

4) கடலும் நீரும்

 

5) எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன ?

1) வானம்

2) மின்விசிறி

3) காகிதம்

4) காற்று

 

6) உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?

1) பாய்

2) பாம்பு

3) அட்டை

4) தடி

 

7) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார் ?

1) வளி

2) தொப்பி

3) காளான்

4) காற்று

 

8) யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன ?

1) மரக்கதவு

2) கண் இமை

3) யன்னல்

4) வாசல்

 

9) அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார் ?

1) தடி

2) சவுக்கு

3) காயம்

4) வெங்காயம்

 

10) வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார் ?

1) ஆறு

2) குளம்

3) கடல்

4) கிணறு

 

No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed