விடுகதை வினா விடைகள்
1) வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
1) மிளகாய்
2) பயறு
3) உழுந்து
4) நெல்
2) தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
1) கை
2) முதுகு
3) பூ
4) காய்
3) பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
1) சீப்பு
2) கல்
3) பல்
4) முகப்பூச்சு
4) ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
1) வீட்டுமுற்றம்
2) வாசல்
3) கதவு
4) உள்ளங்கையும் விரல்களும்
5) தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?
1) வாழைப்பழம்
2) பனம்பழம்
3) தேங்காய்
4) பாக்கு
6) தட்டச் சீறும் அது என்ன?
1) தீக்குச்சி
2) மெழுகுதிரி
3) நாய்
4) சிங்கம்
7) வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
1) வாழ்க்கை
2) வழுக்கை
3) உலக்கை
4) பொக்கை
8) காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?
1) விமானம்
2) பறவை
3) பலூன்
4) குருவி
9) பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
1) காகம்
2) குருவி
3) கிளி
4) கோழி
10) அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
1) பாக்கு வெற்றிலை
2) அம்மி குளவி
3) கை கால்
4) மலை மடு
No comments:
Post a Comment