Sunday, July 21, 2024

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை | Kalpana Chawla Katturai Tamil

முன்னுரை:

  • விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பெரிய உதாரணமாக உள்ளவர். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நினைவாக்கி பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வாழ்ந்துக் காட்டியவர்.

இளமையும், கல்வியும்:

  • கல்பனா சாவ்லா 1961-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.

  • இவர் தனது ஆரம்ப கல்வியை அரசுப்பள்ளியில் பயின்றார். தனது கல்லூரி படிப்பை பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான துறையில் இளங்கலை பட்டம் பயின்றார். முதுகலை மற்றும் முனைவர் படிப்பை அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் பயின்றார்.

சாதனைகள்:

  • நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.

  • இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது.

  • அவரின் புகழின் உச்சகட்டமாக 2001-ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளிப் பயணம்:


  • விமானம் மற்றும் கிளைடர்களை 1988-ல் மற்றவர்களுக்கு பயணிக்க கற்று கொடுப்பதற்கான சான்றிதழ் மற்றும் அவர் பயணிப்பதற்கான உரிமத்தை பெற்றார் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் 1995-ல் நாசா சென்றார்.

  • கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. பூமியை சுமார் 252 முறை சுற்றி விண்கலத்தில் 10 மில்லியன் தொலைவு பயணம் செய்தார்.

  • இவரின் இரண்டாவது விண்வெளிப் பயணம் 2003-ம் ஆண்டு நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவுடன் ஏழு பேர் பயணித்தனர். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை முடிப்பதற்கு பதினாறு நாட்கள் ஆனது.

முடிவுரை:

  • பல சாதனைகளை படைத்த கல்பனா சாவ்லா தனது இறுதி கட்ட விண்வெளிப் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது விண்கலம் வெடித்து சிதறி உயிரிழந்தார். இந்த நிகழ்வில் கல்பனா சாவ்லா மட்டுமல்ல அவருடன் சென்ற ஏழு பெரும் உயிரிழந்தனர்.

  • விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு தற்போது வரை பல மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

  • முயற்சியும் தைரியமும் இருந்தால் இவ்வுலகை மட்டுமல்ல வானுலகையும் ஆளலாம் என்று உலகிற்கு உணர்த்தி காட்டிய ஒரு சிறந்த பெண்மணி கல்பனா சாவ்லா.

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed