Sunday, July 21, 2024

இந்திய சுதந்திர தினம் பற்றிய 10 வரிகள்.!

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆங்கிலேயரின் அடிமை தனத்தில் இருந்து இந்திய மக்களை மீட்க பல தியாகிகள் தங்கள் இன்னுயிரை தந்து அயராது பாடுபட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இவர்களின் உயிர் தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் சுதந்திர தினத்தை முதன் முதலில் ஜவகர்லால் நேரு அவர்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றி கொண்டாடினார். எனவே, பள்ளி மாணவர்கள் இந்திய சுதந்திர தினம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்திய சுதந்திர தினம் பற்றிய 10 வரிகளை பின்வருமாறு தொகுத்துள்ளோம்.

 

200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு, 15 ஆம் தேதி அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது.

நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், செங்கோட்டையில் முதல் முறையாக இந்தியக் கொடியை ஏற்றினார்.

அதன் பிறகு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசிய விடுதலை நாள் ஆகும்.

இந்தியா சுதந்திரம் பெற அயராது பாடுபட்ட இந்திய போராட்ட வீரர்கள்.!

இது நாட்டின் சுதந்திரத்திற்கான போரட்டத்தை நினைவுபடுத்தும் வகையிலும் நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளையும் நினைவுபடுத்தும் வகையிலும்  கொண்டப்பட்டு வருகிறது.

 

இந்திய சுதந்திர தினம், நாட்டு மக்களிடையே தேசிய உணர்வு மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை தூண்டி ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.

 

இந்நாளில், நமது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில், நம் நாட்டிற்க்காக  தங்கள் இன்னுயிரை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்த நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் வகையில் மூவர்ணக்கொடி ஏற்றி வணங்குகிறோம்.

 

நமது மதம், கலாச்சாரம் மற்றும் ஜாதி வேறுபாடின்றி ஒவ்வொரு இந்தியனும் இந்தியன் என்ற உண்மையைக் கொண்டாட ஒன்று கூடி இவ்விழாவை கொண்டாடுகிறார்கள்.

 

ஆகஸ்ட் 15 ஆம் நாள், பல நாடுகளில்இந்திய தினம்என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

 

இன்று கல்வி, விளையாட்டு, போக்குவரத்து, வணிகம் என எல்லாத் துறைகளிலும் இந்தியா சுதந்திரம் பெற்றிருப்பது நம் முன்னோர்களின் பல ஆண்டுகாலப் போராட்டத்தால் தான். 1947 க்கு முன்,இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக இருந்தனர் மற்றும் அவர்களின் அனைத்து கட்டளைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

இதனை அறிந்த மகாத்மா காந்தி, தாதாபாய் நௌரோஜி, சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற பல தியாகிகள் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தனர்.

 

இன்று நம் இந்தியாவில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் சுதந்திராமகவும் இருப்பதற்கு காரணமாக இருந்த அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் புகழ் என்றென்றும் வாழ்க.!

 


No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed