Sunday, July 21, 2024

காமராஜர் பற்றிய பேச்சு 10 வரிகள்

 

காமராஜர் பேச்சு பற்றி 10 வரிகள்:

காமராஜர் ஜூலை 15-ம் தேதி 1903 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் குமாரசாமிக்கும், சிவகாமியம்மைக்கும் மகனாக பிறந்தவர்.

 

இவருடைய இயற்பெயர் காமாட்சி, இவரின் தாயார் செல்லமாக ராஜா என்று அழைப்பார். இதுவே கால போக்கில் காமராஜர் என்று ஆகிவிட்டது.

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்

காமராஜருக்கு 18 வயது இருக்கும் போது அரசியலில் சேர வேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்தார். இவர் முதலமைச்சராக இருந்த போது மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

தொழில், கல்வி, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக பெரிதும் பங்காற்றி உள்ளார். 1976 ஆம் ஆண்டு காமராஜர் பாரத ரத்னா விருதையும் பெற்றார்.

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். பள்ளிக்குழந்தைகளுக்குஇலவச மதிய உணவு திட்டத்தினையும் அமல்படுத்தினார். ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை

இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது. இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுக்குள் மதராஸில் நீர்ப்பாசன அமைப்புகளை விரைவாக முடித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார வசதியையும் வழங்கினார்.

1964-ஆம் ஆண்டு ஜவர்கர்களால் நேரு மரணம் அடைந்தவுடன் லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966-ம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணம் அடைந்தவுடன்  48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.

 

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம்  தேதி தன்னுடைய 72-வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதானபாரத ரத்னா விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. இவர் தனது வாழ்நாள் கடைசி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.

உன்னைப்போல அரசியல்வாதி இனி உலகில் பிறக்கப்போவதும் இல்லை, உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை

 


No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed