வாசகர்களுக்கு வணக்கம்..! மக்களவை தலைவர் என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் மக்களவையை நடத்தும் தலைவரைக் குறிக்கும். மக்களவை உறுப்பினர்களால் மக்களவை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குடியரசு தலைவர் மக்களவைத் தலைவரின் தேர்தலை தீர்மானிக்கிறார். பேரவையே நடத்துவது, கண்காணிப்பது, மசோதாக்களை தீர்மானிப்பது, தீர்மானங்கள் இயற்றுவது போன்றவை சபாநாயகரின் அதிகாரங்களாக உள்ளது. இப்பொழுது நாம் இந்த பதிவில் இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்..? அவர் பெயர் என்ன..? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
Indiavin
Mudhal Sabanayagar Yaar – இந்தியாவின் முதல் சபாநாயகர்:
இவர் பம்பாய் மாகாணத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் மராத்திய குடும்பத்தில் 1888-ல் பிறந்தார். 1908-ல் அகமதாபாத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின் பம்பாய் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து 1913-ல் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போது காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரின் நட்புக்கு பிறகு ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றார்.
பம்பாய் மாகாண சட்டமன்றம் மற்றும் தேசிய சட்டமன்றத்திற்கும் 1937-ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 14-ம் தேதி
1947-ல் இந்திய சுதந்திரம் பெறப்போகும் நள்ளிரவு வரை தேசிய சட்டப்பேரவையின் தலைவராக இருந்தார். அதன் பிறகு பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் அப்பணியை நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.
Indiavin
Mudhal Sabanayagar Name – இந்தியாவின் முதல் சபாநாயகர்:
1949-ல் நாடாளுமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக இருந்தார், பின் 1952-ல் இயற்றப்பட்ட முதல் மக்களவைக்கு சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களவையில் இவர் ஆற்றிய பணி எண்ணற்றது. அவையை நடத்துவதும் மசோதாக்களை நிறைவேற்றுவதும் இவர் பணியாக இல்லாமல், மக்களவை உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தந்து எவ்வித சண்டை சச்சரவு இல்லாமல் சிறப்பாக நடத்தி வந்த பெருமை இவரையே சாரும்.
இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்? பெயர்:
பழைய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நடைமுறைகள், விதிகள், வழிமுறைகளை பின்பற்றாமல் புதிய சட்டம் பல இயற்றினார். அவையில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக கையாண்ட இவருடைய தீர்ப்புகள் இன்று வரை முன்மாதிரியாக உள்ளது. மக்களவை செயலகம் முழுமையடைய அவர் முழு பங்கு வகித்தார்.
இவருடைய பதவிக்கலாம் 1956-ல் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment