Thursday, November 23, 2023

‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’

 ஒரு பூனை ஒரு பெரிய மரத்துக்கும் கீழே நின்னுகிட்டு இருந்திச்சு.

அப்போது  வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவுல கேட்டுச்சு. பூனை அதை உற்றுக் கேட்டுச்சு

அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்திச்சு.
அந்த நரி பூனைக்கிட்ட , ” வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்துட்டா எப்படி தப்பிப்பாயாம்” அப்பிடின்னு கேட்டிச்சு.

அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.
இந்த மரத்தின் மீது ஏறி உச்சிக்குப் போய் தப்பிச்சுக்குவேன். அவைகள்லாம் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்” ன்னு பதில் சொல்லிச்சு.
“நீ எப்படி தப்பிச்சுக்குவாய்” ன்னு பூனை நரிகிட்ட திருப்பிக் கேட்டிச்சு.
அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்” அப்படின்னு பதில் சொல்லிச்சு.

அப்போ வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால பூனை மளமளன்னு மரத்தின்மேல ஏறிக்கிச்சு.

வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்துடுச்சு; கடைசி நேரத்துல ஒன்னும் தோனாமல் நரி மாட்டிக்கிச்சு.
பூனை நரியைப் பார்த்து கேட்டிச்சு, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்னுகூட நினைவுக்கு வரவில்லையா” அப்படின்னு.


முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது.

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed