Wednesday, July 31, 2024

சுபாஷ் சந்திர போஸ்

 நாணயமாக நடப்பவர்கள், ஒளிக்கும், இருளுக்கும் அஞ்சுவதில்லை.

பிராய்டு

வலிமையான ஒரு கருத்திற்கு பிரதிநிதிகளாக நிற்கும் வரை மனிதர்கள் வலிமையானவர்கள். அதனை எதிர்க்கும்போது சக்தி குன்றியவர்களாகி விடுவார்கள்.

ஹோம்கின்ஸ்

 அளவில்லாத சோதனைகளை தாங்கி சாதனை படைக்கிறவன் தான் மேதை.

மாத்யூஸ்

தன்னந்தனியே எவன் ஒருவன் நிற்க துணிகிறானோ. அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.

டீச்சர்

 அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம்.

தாமஸ் புல்லர்

 தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும். தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்.

டால்ஸ்டாய்

 எந்த தொழிலும் இழிவு இல்லை. தொழில் எதுவும் செய்யாதிருப்பது தான் இழிவு.


எதிர்காலத்தை பற்றி நினைத்துக் கொண்டிராமல் நிகழ்காலத்தை நல்வகையில் பயன்படுத்தும் மனிதனே மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.

ஸ்டோன்

 நல்ல யோசனை தோன்றும் போது, அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்.

ஜேம்ஸ் ஹோபெல்

 பகைவனின் புன் சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது.

காந்தி

 உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் துன்பம் அடையார்.

போவீ

 அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.

தோரோ

உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு உலகமே உங்கள் வசமாகும்.

இங்கர்சால்

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.

மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது.

மனிதன் ஒரு உண்மையை கண்டுபிடித்தான் என்றால் வாழ்க்கையில் ஒரு தீபத்தை ஏற்றினான் என்று பொருள்.

நார்மன் வின்சென்ட்

 நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும்.

ராஜாஜி

ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக்கொண்ட பிறகு பின் வாங்க கூடாது.

கார்ல் மார்க்ஸ்

உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.


பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது.

Monday, July 29, 2024

டிஸ்ரேலி

 சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

மில்டன்

 கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் தான் வீரர்கள்.

கன்பூஷியஸ்

தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.


விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், எழுந்தாலும் இமயமாய் நிமிர்ந்து நில்லுங்கள்!

ஸ்டாலின்

 உலகில் உள்ள எல்லா சக்தியாலும் தகர்க்க முடியாத சக்தி ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.

Monday, July 22, 2024

இந்தியாவின் முதல் சபாநாயகர் | Indiavin Mudhal Sabanayagar Yaar

 

வாசகர்களுக்கு வணக்கம்..! மக்களவை தலைவர் என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் மக்களவையை நடத்தும் தலைவரைக் குறிக்கும். மக்களவை உறுப்பினர்களால் மக்களவை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குடியரசு தலைவர் மக்களவைத் தலைவரின் தேர்தலை தீர்மானிக்கிறார். பேரவையே நடத்துவது, கண்காணிப்பது, மசோதாக்களை தீர்மானிப்பது, தீர்மானங்கள் இயற்றுவது போன்றவை  சபாநாயகரின் அதிகாரங்களாக உள்ளது. இப்பொழுது நாம் இந்த பதிவில் இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்..? அவர் பெயர் என்ன..? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

 

Indiavin Mudhal Sabanayagar Yaar – இந்தியாவின் முதல் சபாநாயகர்:

இவர் பம்பாய் மாகாணத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் மராத்திய குடும்பத்தில் 1888-ல் பிறந்தார்1908-ல் அகமதாபாத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின் பம்பாய் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து 1913-ல் வழக்கறிஞரா பணியாற்ற தொடங்கினார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போது காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரின் நட்புக்கு பிறகு ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றார்.

பம்பாய் மாகாண சட்டமன்றம் மற்றும் தேசிய சட்டமன்றத்திற்கும் 1937-ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 14-ம் தேதி 1947-ல் இந்திய சுதந்திரம் பெறப்போகும் நள்ளிரவு வரை தேசிய சட்டப்பேரவையின் தலைவராக இருந்தார். அதன் பிறகு பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் அப்பணியை நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.

 

Indiavin Mudhal Sabanayagar Name – இந்தியாவின் முதல் சபாநாயகர்:

1949-ல் நாடாளுமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக இருந்தார், பின் 1952-ல் இயற்றப்பட்ட முதல் மக்களவைக்கு சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களவையில் இவர் ஆற்றிய பணி எண்ணற்றது. அவையை நடத்துவதும் மசோதாக்களை நிறைவேற்றுவதும் இவர் பணியாக இல்லாமல், மக்களவை உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தந்து எவ்வித சண்டை சச்சரவு இல்லாமல் சிறப்பாக நடத்தி வந்த பெருமை இவரையே சாரும்.

இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்? பெயர்:

பழைய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நடைமுறைகள், விதிகள், வழிமுறைகளை பின்பற்றாமல் புதிய சட்டம் பல இயற்றினார். அவையில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக கையாண்ட இவருடைய தீர்ப்புகள் இன்று வரை முன்மாதிரியாக உள்ளது. மக்களவை செயலகம் முழுமையடைய அவர் முழு பங்கு வகித்தார்.

இவருடைய பதவிக்கலாம்  1956-ல் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முடிவுக்கு வந்தது.

 

Sunday, July 21, 2024

காமராஜர் பற்றிய பேச்சு 10 வரிகள்

 

காமராஜர் பேச்சு பற்றி 10 வரிகள்:

காமராஜர் ஜூலை 15-ம் தேதி 1903 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் குமாரசாமிக்கும், சிவகாமியம்மைக்கும் மகனாக பிறந்தவர்.

 

இவருடைய இயற்பெயர் காமாட்சி, இவரின் தாயார் செல்லமாக ராஜா என்று அழைப்பார். இதுவே கால போக்கில் காமராஜர் என்று ஆகிவிட்டது.

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்

காமராஜருக்கு 18 வயது இருக்கும் போது அரசியலில் சேர வேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்தார். இவர் முதலமைச்சராக இருந்த போது மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

தொழில், கல்வி, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக பெரிதும் பங்காற்றி உள்ளார். 1976 ஆம் ஆண்டு காமராஜர் பாரத ரத்னா விருதையும் பெற்றார்.

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். பள்ளிக்குழந்தைகளுக்குஇலவச மதிய உணவு திட்டத்தினையும் அமல்படுத்தினார். ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை

இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது. இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுக்குள் மதராஸில் நீர்ப்பாசன அமைப்புகளை விரைவாக முடித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார வசதியையும் வழங்கினார்.

1964-ஆம் ஆண்டு ஜவர்கர்களால் நேரு மரணம் அடைந்தவுடன் லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966-ம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணம் அடைந்தவுடன்  48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.

 

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம்  தேதி தன்னுடைய 72-வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதானபாரத ரத்னா விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. இவர் தனது வாழ்நாள் கடைசி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.

உன்னைப்போல அரசியல்வாதி இனி உலகில் பிறக்கப்போவதும் இல்லை, உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை

 


Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed