Wednesday, December 13, 2023

சுவாமி விவேகானந்தர் கதைகள் – என் உடல் புலிக்கு உணவாகட்டும்!

 

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்புஇந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார்இவ்விதம் அவர் நாலரை ஆண்டுகள் இருந்தார்அந்நாள்களில் பொதுவாக அவர் பிச்சை எடுத்துஅதில் கிடைக்கும் உணவையே உட்கொண்டார்இந்த நிலையில் ஒருநாள் அவர்எனக்கு ஏழைகள் உணவு தருகிறார்கள்அந்த ஏழைகளுக்கு என்னால் என்ன நன்மைஅவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால்அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமேஅதெல்லாம் போகட்டும்நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறதுஎனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார்அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்ததுஎனவே அவர்ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்றுஉணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவதுஎன்று தீர்மானித்தார்இந்த எண்ணத்துடன் அவர் ஒரு காட்டிற்குள் சென்றார்.

அங்குக் காட்டில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார்மாலை வேளை வந்தபோதுமயக்க நிலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இறைவனைத் தியானம் செய்ய ஆரம்பித்தார்அவரது தியானம் சிறிது கலைந்தபோது… ஆகா… அதோ தெரியும் இரண்டு நெருப்புத் துண்டுகள்… ஆம்அவை… சந்தேகமேயில்லைஒரு புலியின் கண்கள்தாம்அதோஅந்தக் கண்கள் அவரை நோக்கி நெருங்கி நெருங்கி வந்தனஇதோ அருகில் வந்துவிட்டனவிவேகானந்தரின் உடலும் சரிஉள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லைஅசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும்ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டதுபுலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:சரிதான்என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும்இருவரும் பட்டினியாக இருக்கிறோம்இந்த என் உடலால் உலகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லைஇந்த புலிக்காவது என் உடல் உணவாகப் பயன்படும் என்றால்அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டார்இந்த எண்ணத்துடன் அவர் அமைதியாகஅசைவின்றி மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டார்.

கண்களை மூடி அவர்இதோஇப்போது புலி என்மீது பாயப் போகிறதுஎன்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார்ஒரு கணம்இரண்டு கணம்ஒரு நிமிடம் என்று நேரம் கடந்ததுபுலி பாயவில்லைஅதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்ததுகண்களைத் திறந்து பார்த்தார்அங்கே புலி இல்லைஅது அங்கிருந்து சென்றுவிட்டிருந்ததுஅப்போது அவர்ஆகாஇறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார்என்று மனம் உருகி நினைத்துப் பார்த்தார்அன்றைய இரவை விவேகானந்தர் காட்டிலேயே தியானத்தில் கழித்தார்பொழுது விடிந்ததுமுந்தின நாளின் களைப்புசிரமம் எவையும் அவர் உடலில் இல்லைஉடலும் மனமும் புதிய ஓர் ஆற்றலைப் பெற்றதுபோல் இருந்தனஅவர் மேற்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed