சமத்துவமானது உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய லட்சியவாதமாக உள்ளது. எனினும் சமத்துவமின்மை என்பது எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளது. இதனை இல்லாதொழித்து சமூகத்தினையும், நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
சமத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
§ முன்னுரை
§ சமத்துவம் என்றால்
என்ன
§ சமத்துவத்தின் முக்கியத்துவம்
§ சமத்துவத்தின் வகைகள்
§ சமத்துவத்திற்கான சவால்கள்
§ முடிவுரை
முன்னுரை
இயற்கையானது மனிதர்கள்
அனைவரையும் சமமாகப்
படைக்கவில்லை. நிறம்,
உயரம், திறமை,
உடல் வலிமை
எனப் பலவற்றிலும் வேறாகப்
படைக்கப்பட்டுள்ளனர். இதனை நாம்
சரி செய்ய
இயலாது. எனினும்
மனிதனால் ஏற்படுத்தப்படும் வேற்றுமையை
சரி செய்ய
இயலும்.
குறிப்பாக சாதி,
அந்தஸ்து, மதம்,
மொழி, பொருளாதாரம் போன்றவற்றில்
மனிதனால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமத்துவமின்மையைச்
சரி செய்ய
முடியும். இக்கட்டுரையில் சமத்துவம்
பற்றி நோக்கலாம்.
சமத்துவம்என்றால் என்ன
சமத்துவம் என்பது
சம வாய்ப்புள்ள நிலை
ஆகும். ஒவ்வொரு
தனி நபருக்கும் அல்லது
மக்கள் குழுவிற்கு அவர்களின்
சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் அதே வளங்களையும், வாய்ப்புகளையும்
வழங்குவதே சமத்துவமாகும்.
அதாவது சமத்துவம் என்பது பாலினம், இனம் மற்றும் சமூக நிலை போன்ற காரணிகளை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு தனி நபரின் சமமான வாய்ப்புகளுக்கான உரிமையைக் குறிக்கின்றது.
சமத்துவத்தின் முக்கியத்துவம்
சமத்துவம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை மற்றும் ஜனநாயக சமூகங்களின் தூண் ஆகும். உலகெங்கிலும் உள்ள அனைத்து மனிதர்களின் உரிமைகளும் மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு சமத்துவம் முக்கியமானதாகும்.
ஒரு சமூகத்தில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமாயின் அந்த ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய சமத்துவம் என்ற கருவி முக்கியம் ஆகும்.
ஒரு நாட்டு மக்கள் ஜாதி, இன, மத, மொழி பேதங்கள் இல்லாமல் தொழிலாளி, முதலாளி கொடுமைகள் இல்லாமல், ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் குடியானவர், நிலச்சுவாந்தர்கள் வித்தியாசம் இல்லாமல், உயர்ந்தவர், தாழ்ந்தவர் வித்தியாசம் இல்லாமல் சுதந்திரம் பெற்று வாழ சமத்துவம் முக்கியமாகும்.
சமத்துவத்தின் வகைகள்
சமத்துவமானது பல வகைகளில் காணப்படுகின்றது.
சமூக சமத்துவம் – சமூக சமத்துவம் என்பது அனைத்துக் குடிமக்களும் சம தகுதியை
அடைய உரிமைகள் கொண்டவர்கள் என்பதுவே சமூக சமத்துவமாகும்.
குடிமை சமத்துவம் – குடிமை சமத்துவம் என்பது அனைத்து மக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதாகும்.
அரசியல் சமத்துவம் – குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாகப் பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது.
பாலியல் சமத்துவம் – பாலியல் சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரும் சமமான வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை பெறுதலாகும்.
சமத்துவத்திற்கான சவால்கள்
சமத்துவமானது ஓர் அடிப்படை உரிமையாகக் காணப்படுகின்ற போதிலும் அனைவருக்கும் இது கிடைப்பதில் சவால்கள் நிறைந்துள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக சமத்துவத்தினை அடைவதென்பது கடினமாக உள்ளது.
மக்கள் மத்தியில் கல்வி அறிவின்மை, சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு இன்மை போன்ற காரணங்களால் சமத்துவத்தினை ஏற்படுத்துவது மேலும் சிரமமாக உள்ளது.
முடிவுரை
சமத்துவத்தினை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை முன்னெடுப்பது அவசியமாகும். இதற்காக அனைவரும் நியாயமாக வழிநடத்தப்பட வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய பண்பாட்டினை உருவாக்க வேண்டும், சட்டம் மற்றும் கொள்கைகளை வகுத்து முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment