இன்று உலகில் எப்பாகத்தில் இடம் பெறும் செய்திகளையும் எமக்களிக்கக்கூடியதொரு ஊடகமே பத்திரிகையாகும். இப்பத்திரிகையானது அன்று முதல் இன்று வரை வளர்ந்து வருகின்றமை சிறப்பிற்குரியதாகும். பத்திரிகைகளே எம் அறிவாற்றளுக்கான சிறந்ததொரு ஊடகமாகும்.
பத்திரிகையின் பயன்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
§ முன்னுரை
§ பத்திரிகை வாசிப்பின்
சிறப்பு
§ பத்திரிகை வாசிப்பின்
அவசியம்
§ பத்திரிகையின் பயன்கள்
§ சமகாலத்தில் பத்திரிகையின்
போக்கு
§ முடிவுரை
முன்னுரை
பத்திரிகையானது இன்று
செய்தித்தாள், நாளிதல்
என பல
வடிவங்களில் எம்மை
வந்தடைகின்றன. இதன்
மூலமாக இன்று
பல்வேறு செய்திகள்
கிடைக்கப் பெறுகின்றன.
மேலும் இப்பத்திரிகையினூடாக
நாட்டு நடப்புக்களை இலகுவாக
அறிந்த கொள்ள
முடிகிறது. பல்வேறு
விடயங்களை எமக்களிக்கக் கூடியதொன்றாகவே
பத்திரிகைகள் திகழ்கின்றன. இக்கட்டுரையில்
பத்திரிகையின் பயன்கள்
பற்றி நோக்கலாம்.
பத்திரிகை வாசிப்பின் சிறப்பு
பல்வேறு தகவல்களை
சேகரித்து கொண்டு
வரும் ஓர்
ஊடகமாகவே பத்திரிகையானது காணப்படுகிறது.
இது வெவ்வேறு
நாடுகளின் நிலமைகள்,
சமூகப்பிரச்சினைகள், உலக
நடப்புக்களை எடுத்துரைக்கக் கூடியதொரு
சிறப்பு பெற்றவையாகவே காணப்படுகின்றன.
மேலும் இன்றைய
காலகட்டத்தில் பத்திரிகைகளே வெகுஜன
ஊடகமாகவும் செயற்படுகின்றது.
பத்திரிகை வாசிப்பின் அவசியம்
பத்திரிகையானவை அன்று முதல் இன்று வரை பிரதான இடத்தை பிடித்துக்கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டே வருகின்றது. பத்திரிகை வாசிப்பானது எமது வாசிப்பு திறன், மொழித்திறன் பொது அறிவு போன்றனவற்றை வளர்த்து கொள்ள துணை புரிகின்றது.
மேலும் மாணவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பத்திரிகை வாசிப்பு அவசியமானதாகும். மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை எற்படுத்துவதில் பத்திரிகையின் பங்கு அளப்பரியதாகும்.
நாம் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக இடம்பெறும் செய்திகளின் விரிவான விளக்கத்தினை பத்திரிகை மூலமாகவே அறிந்துகொள்ளலாம். செய்திகளின் உண்மைத் தன்மைகளை அறிவதற்கு அவசியமானதொரு ஊடகமே பத்திரிகையாகும்.
பத்திரிகையின் பயன்கள்
நாம் வாசிக்கும் பத்திரிகையானது பல்வேறு பயன்களை கொண்டமைந்ததாகவே காணப்படுகிறது.
பத்திரிகையினூடாக உலக நடப்புக்கள் மற்றும் அறிவு சார்ந்த விடயங்களை அறிந்து கொள்ளமுடியும். அதே போன்று சமூகத்தில் இடம்பெறக்கூடிய சமகால நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும் கல்வி, விளையாட்டு, கலை, பண்பாடு, வியாபாரம் போன்ற பல்வேறு விடயங்களை வளர்த்து கொள்ளவும் உதவுகிறது.
உற்பத்திகளை பெருக்குவதற்கும், புதிய சேவைகளை அறிமுகப்படுத்தவும் ஓர் சிறந்த களமாக பத்திரிகை காணப்படுகிறது. அத்தோடு வாசிப்பு மற்றம் எழுத்தறிவு வீதத்தை அதிகரிப்பதற்கான ஓர் ஊடகமாகவும் இது திகழ்கன்றது.
சமகாலத்தில் பத்திரிகையின் போக்கு
நவீன தொழிநுட்பம் வளர்ச்சியடைந்து கொண்டு வரும் காலப்பகுதியில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகையதொரு சூழலில் பத்திரிகையானது வெளியிடப்பட்டிருந்தாலும் பத்திரிகை வாசிப்பானது அரிதாகிக்கொண்டே வருகின்றது.
இன்றைய கால கட்டத்தில் கையடக்க தொலைபேசி மற்றும் இணையதளம் என பல்வேறு ஊடகங்களின் பாவனையின் காரணமாக பத்திரிகை வாசிப்பானது பலமிழந்தே காணப்படுகின்றது.
சிறுவர்கள் தொடக்கம் இளைஞர்கள் வரை அனைவரும் நவீன தொழிநுட்ப ஊடகங்களுக்கே அடிமையாகி வருகின்றனர். இதன் காரணமாக பத்திரிகை வாசிப்பானது படிப்படியாக குறைவடைந்து கொண்டே வருகின்றது.
ஒருபக்கம் காணப்படினும் அன்று முதல் இன்று வரை பத்திரிகையின் முக்கியத்துவத்தை அறிந்து அதன் உண்மைத்தன்மைகளை உணர்ந்தவர்கள் இன்றும் பத்திரிகை வாசிப்பிற்கு முன்னுரிமையளித்தே வருகின்றனர்.
முடிவுரை
நாம் எமது பொழுதுபோக்குகளை வீணற்ற முறையில் கழிக்காமல் எமது அறிவை வலுப்படுத்தும் பத்திரிகைகளை வாசிப்பதனூடாக எமது அறிவுத் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment