ஒரு அரசனுக்கு வயதாகிவிட்டது . அதனால் அவருக்கு கவலைகளும் சாவைப் பற்றிய பயங்களும் தோன்றிவிட்டன . ஒரு நாள் இரவு முழுவதும் அவரால் தூங்க முடிய வில்லை மரணபயம் அவரைத் தூங்கவிட வில்லை.
அவர் தன் கையால் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறார் , பல நாடுகளை வென்றிருக்கிறார் . ஆகிவிட்டது இவருக்கு ? இப்படிக் கோழையாகி விட்டார் மற்றவர்களின் மரணம் இவருக்குக் கவலையளிக்கவில்லை , தன் மரணத்தை நினைத்தாலோ தூக்கம் வரவில்லை .
மறுநாள் காலை தனது எல்லா அமைச்சர்களையும் வரவழைத்தார் . அவர்களி டம் கேட்டார் : ” எனக்கு ஒரு மோசமான சந்தர்ப்பம் ஏற்படுகிறதென்று வைத்துக் கொள்வோம் . அந்த நேரத்தில் நீங்கள் யாரும் அருகில் இல்லை , ஆலோசனை சொல்வதற்கு . எனக்கோ தோன்றவில்லை . வழியும் இந்த எந்த மாதிரியான சூழ்நிலைகளுக்காக நீங்கள் ஒரு வாசகத்தை பரிந்துரைக்க வேண்டும் . அதை நான் என் வைர மோதிரத்திற்குக் கீழே பதித்து கொள்வேன் . ” அரசருடைய வைர மோதிரம் திறக்கும் படியாகவும் வாசகத்தையும் பதிக்கும் படியாகவும் செய்யப்பட்டிருந்தது .
மந்திரிகளுக்கு ஒன்றும் தோன்ற வில்லை . இது மிகவும் கடினமானது . அரசரின் ஆலோசகர்கள் கவலையடைந்தார்கள் ; குழப்பமும் கூட . இந்த நேரத்தில் ஒரு முதியவர் ஒரு வாக்கியத்தைப் பரிந்துரைத்தார் . அது மற்ற எல்லாராலும் ஏற்கப்படவும் செய்தது . அந்த வாக்கியம் அரசரின் வைர மோதிரத்தில் பதிக்கப்பட்டது . ஆனால் ஒரு நிபந்தனை : அந்த வாக்கியத்தை ஆர்வத்தின் காரணமாக திறந்து படிக்கக் கூடாது . அவர் ஆபத்தில் இருக்கும் போது தான் , வேறு வழிகளே தென்படாத போது தான் , இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் போது தான் , வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்ட போதுதான் மோதிரத்தைத் திறந்து படிக்க வேண்டும்.
சந்தர்ப்பவசமாக அந்த வாக்கியத் ததைப் படிக்கும் சூழ்நிலை எண்ணி பதினைந்தே நாட்களுக்குப் பின்பு வந்தது பக்கத்து நாடு படையெடுத்து வந்தது. அந்த நாடு இந்த அரசரால் பல தடவை பிடிக்கப்பட்டது, முறியடிக்கப்பட்டது. நமது அரசர் தன் நாட்டை இழந்தார். எப்படியோ தன் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு மலைக் காடுகளுக்குள் குதிரையின் மேல் ஏறி தப்பி விட்டார். அவர் தனித்திருந்தார்.
தன்னைப் பின் தொடர்ந்து வரும் எதிரிப் படையினரின் குதிரைகளின் குளம்படிச் சப்தத்தைக் கேட்கமுடிந்தது. அந்த சப்தமும் நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் தனது பரிதாபமான காயம்பட்ட குதிரையை முடிந்த அளவு வேகமாக விரட்டினார்.
இந்தத் தப்புதலுக்கு ஒரு முடிவு விரைவில் வந்தது. அவர் சென்ற பாதை ஒரு மலையுச்சியில் முடிவடைந்தது. அதற்கு அப்பால் படுபாதாளம். அந்த மலை யுச்சியையும் அதையடுத்த பள்ளத் தாக்கையும் கண்டு களிக்க உல்லாசப் பயணிகள் அங்கு வருவதுண்டு.
ஆனால் நம் அரசருக்கு அது ஒரு சாவுப் பயணத்தின் வாசலாக அமைந்து அந்தப் பள்ளத்தாக்கில் அவர். குதித்தால் அவர் எலும்பு கூட மிஞ்சாது . வந்த வழியே திரும்பவும் முடியாது . ஏனென்றால் அது மிகவும் குறுகிய பாதை . இந்த நேரத்தில் தன் கையில் உள்ள வைர மோதிரம் சூரிய ஒளிபட்டு மின்னுவதை கவனித்தார் .
பிறகு அதைத் திறந்து வாசகத்தைப் படித்தார் . அந்த வாசகம் மிகவும் சிறியதுதான் . ஆனால் மிகச் சிறந்தது அந்த வாசகம் . ” இந்த நிலையும் மாறிவிடும் . ” ‘ ‘ THIS TOO WILL PASS AWAY . “ இந்த வாசகம் அரசரின் மனதை அசைத்தது ; ஆழப் பதிந்தது . அவர் மனம் அமைதியுற்றது . தம்மைப் பின் தொடர்ந்து வரும் – எதிரிகளை அவர் மறந்தே போனார் .
தனக்குள்ளே பேசிக் கொண்டார் : ” நான் இந்த இடத்திற்கு வந்ததே இல்லை .நம் தலைநகரைச் சுற்றியுள்ள அழகான இடங்களில் இதுவும் ஒன்று போலும் . இந்த விரோதிகள் என்னை தோல்வியுறச் செய்து பின் தொடராமல் இருந்திருந்தால் , இந்த அழகான இடத்தை நான்
பார்த்திருக்க முடியுமா ? இதை பார்ப்பதற்கு ஒரு நாட்டையே இழக்கலாம் . ” அவர் அமைதியாக அந்த இடத்தின் அற்புதத்தை ரசித்தார் . சிறிது நேரத்தில் தன்னைப் பின் தொடர்ந்து வந்த எதிரிகளின் ஆரவாரம் மறைவதை உணர்ந்தார் .
” ஒரு வேளை அவர்கள் இந்த மலைத்தொடரின் வேறு திசைகளில் தேடிச் சென்றிருக்கலாம் ; கண்டிப்பாக இந்த திசை நோக்கி அவர்கள் வரவில்லை . ‘ ‘ அரசர் நாடு திரும்பினார் . படைகளை திரட்டினார் . மீன்டும் போர் புரிந்தார் . இழந்த நாட்டை மீட்டார் .
தலைநகரின் பிரதான வாயிலிலே அவரை வரவேற்க நாடே விழாக் கோலம் பூண்டிருந்தது . வெற்றியின் கோலாகலத்தில் மக்கள் திளைத்திருந்தார்கள் . ஆடல் பாடல் இசைக் கருவிகளிலே அவர்கள் களித்திருந் தார்கள் .
ஒரு கணம் அரசர் தம் மனத்திற்குள் நினைத்துப் பார்த்தார் : “ என்னை வெல்வது அத்தனை சுலபமன்று . ” இந்தக் கோலாகலத்தையும் , கொண் டாட்டத்தையும் , பார்த்த அவரது ஆழத்தில் சிறிதளவு அகம்பாவம் எட்டிப் பார்த்தது . அந்தக் கணத்தில் அவர் அணிந்திருந்த பெரிய வைர மோதிரம் சூரிய ஒளியில் மன மின்னிற்று . அதைத் திறந்து அவர் மீண்டும் அதைப் படித்தார்
“ இந்த நிலையும் மாறிவிடும் . ” ” THIS TOO WILL PASS AWAY . ” . அவர் அமைதியுற்றார் . ஆணவ அகத்திலிருந்து மிகவும் பணிவுடையவராக மாறினார் .
” இந்தக் கருத்து உங்களுடைய மன ஆழத்தில் பதியட்டும் . ‘ இந்த நிலையும் மாறிவிடும் ‘ ஆகவே எந்த கழ்நிலையிலும் கவலை அடைய வேண்டியதில்லை . வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை . ”
No comments:
Post a Comment