Friday, February 14, 2025

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

 ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவன் பொய் சொல்லும் பழக்கம் உள்ளவன். அந்த ஊரில் எல்லாவித கெட்ட பழக்கங்களையும் உடைய ஒருவன்தான் அவனுக்கு நண்பன். அந்த கெட்டவன் செய்யும் அநியாயங்களில் இருந்து அவனைக் காப்பாற்ற இந்த பொய்யன் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லி அவனைக் காப்பாற்றுவான்.

 உண்மைக்கு மாறாக பல முறை பொய்யன் மனமறிய பொய் சாட்சி சொல்லியுள்ளான்.

இப்படியாக அவன் பொய் சொல்லியதில் கணவன் மனைவி பிரிவு, பெற்றோர் மகன் பிரிவு, அநியாயமாக ஏழையின் நிலத்தைப் பிடுங்கி பணக்காரன் எடுத்துக் கொண்டது, நியாயமாக வியாபாரம் செய்த வியாபாரி நட்டப்பட்து என்பது போல பலர் அவனால் பாதிக்கபட்டு உள்ளார்கள்.

கிராமத்து பழக்கப்படி அவன் கோவிலில் கற்பூரம் அணைத்து பொய் சத்தியம் சொல்வான்;  தன்னுடைய மேல் துண்டைப் போட்டு தாண்டுவான். இப்படி பொய் சத்தியம் செய்வதால் யார் பலன் அடைகிறார்களோ அவர்களிடம் பணம்,பொருள் முதலிய சன்மானம் 

வாங்கிக் கொள்வான். அவனால் பாதிப்படைந்தவர்கள் அவனுக்கு  நன்றாக சாபம் கொடுப்பார்கள். அந்த ஊர் மக்கள் எல்லாருமே அவனை வெறுத்து ஒதுக்கி வைத்தார்கள். அவனுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று முடிவு செய்து இருந்தார்கள். ஆனால் அவன் எதையும் பொருட்படுத்தவே மாட்டான்.”எந்த சாபமும் என்னை ஒன்றும் செய்துவிடாது; உங்கள் உதவி இல்லாமல் நான் வாழ்ந்து காட்டுவேன்”என்று எல்லோருக்கும் பதிலாகச் சொல்வான்.

  திடீரென ஒருநாள் காலையில் அவனது ஒரு கையும் ஒரு காலும் செயலற்றுப் போய்விட்டது;அவன் வாய் கோணலாக இழுத்துக் கொண்டது ;அவனுக்கு சரியாகப் பேச்சு வரவில்லை. இதனால் அவனால் வீட்டை விட்டு எங்கும்  வெளியில் போகமுடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. அவனது நிலையைக் கண்டு அவன் மேல் இரக்கம் காட்டுபவர் யாருமே இல்லை. அவனால் பலன் பெற்றவர்கள்கூட அவனைவிட்டு விலகிப் போனார்கள்.

வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமை வந்தது.அவன் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு எடுபிடி வேலைக்குச் செல்லத் துவங்கினர். அவன் மனைவியும் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்யச் சென்றாள். அதன்மூலம் அவர்கள் அரைவயிறு சாப்பிடவும், பொய்யனுக்கு மருத்துவ செலவு செய்யவும் முடிந்தது. தன்னுடைய குடும்பம் தன்னால்தான் இந்த இழிவான நிலைமைக்கு வந்ததாக அவன் மனதுக்குள் வருந்தினான். 

இனி வருந்தி என்ன பயன்; நெஞ்சாரப் பொய் சொல்லி பலருடைய வாழ்வை அழித்ததற்கு அவனுக்கு தக்க தண்டனை கிடைத்துவிட்டது. அவனால் ஒரு பாவமும் அறியாத அவன் குடு்ம்பமே துன்பப்பட நேர்ந்தது.

   எனவே, நாம் மனமறிந்து பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்து நன்மை பெறுவோம். எல்லாருக்கும் நல்லவர்களாக வாழ்வோம்.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

 ஒரு கோவிலுக்கு அருகில் பெரிய குளம் இருந்தது. அந்த குளத்திலே ஒரு பக்கம் தாமரைக் கொடிகளும் எதிர்பக்கம் அல்லிக் கொடிகளும் வளர்ந்திருந்தன. அந்த குளத்திலே கெண்டை, கெளுத்தி, விரால், குரவை, தவளை, நண்டு, நத்தை, aஆமை, தண்ணீர் பாம்புகள் என்று நீரில் வாழும் உயிரினங்கள் நிறைய இருந்தன. அதில் விலாங்கு என்கிற மீனும் இருந்தது.

இந்த விலாங்குமீன் தந்திரம் தெரிந்த மீன். இதன் தலை பாம்பு போல இருக்கும்; வால் பகுதி மீன் போல இருக்கும். பாம்புகளிடமிருந்து தப்பிக்க பாம்புகளிடம் தலையைக்காட்டி தப்பித்துவிடும். மீன் கூட்டத்திற்கு தன் வாலைக்காட்டி மீன் கூட்டத்தில் சேர்ந்துகொள்ளும். இந்த தந்திரத்தாலே இது மீன் கூட்டத்திலும்,பாம்பு கூட்டத்திலும் 

சேர்ந்து இருக்கும். இதனால் தன்னை ஒரு அறிவாளியாக எண்ணிக் கொண்டு நீரில் வாழும் மற்ற உயிரினங்களை பற்றி அவை இல்லாதபோது மிகவும் தாழ்வாக பேசும். பெரும்பாலும் சேற்றில் மறைந்து கொள்ளும். 

ஏதாவது பாம்பைக் கண்டால், 

“அண்ணே, வணக்கம்”என்று கூழைக் கும்பிடு போடும். அந்த பாம்பு நகர்ந்து சென்றதும்,

” இது கொஞ்சமும் நஞ்சு இல்லாத தண்ணீர்ப் பாம்பு; இது கடித்தால் யாரும் சாகவே மாட்டார்கள்; ஆனாலும் பாம்புங்கிற  பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை” என்று அதைப்பற்றி இழிவாகப் பேசும்.

கெளுத்தி மீனைப் பார்த்தால்,

“எல்லா மீனையும் கொத்தி சாப்பிடும்  நாரை, கொக்குயெல்லாம் உனக்குத் தாடையில் முள் இருக்கறதால  

உன்னைக் கொத்தாமல்  பயந்து ஓடிடும்” என்று புகழ்ந்து பேசும். அது நகர்ந்து போனதும்,

“இதெல்லாம் கொக்கு கூட விரும்பாத ஒரு பிறவி” ன்னு  மற்ற மீன்களிடம் கேலி பேசும்.

எதிரே நண்டு வருவதைக் கண்டால்,

“நண்டு நண்பா, உன்னைப்போல். எனக்கும் கொடுக்கு இருந்தால் எல்லாரும் என்னைப் பார்த்து பயப்படுவார்கள்” என்று பயப்படுவது போல கூறும். அது சென்றதும்,

“கொடுக்கு இருந்தால் மட்டும் போதுமா? இது தலையே இல்லாத முண்டம்தானே;தலையில்லாட்டி மூளை எப்படி இருக்கும்” ன்னு அதன் உருவத்தைக் கேலி பேசும்.

ஆமையைக் கண்டால்,”நண்பா,உன்னைப்போல் பாதுகாப்பான ஓடு யாருக்குமே இல்லை; ஆபத்து வந்தால் ஓட்டிற்குள் 

பதுங்கிக் கொள்வாய்;உன்னை கொல்லவே முடியாது” ன்னு பாராட்டிப் பேசும். அது அகன்றதும்,”இதெல்லாம் நீரிலிருந்து தரைக்குச் சென்றால், இதைத் திருப்பிப் போட்டு ஒரு அடி கொடுத்தால் ஆள் அதோடு காலி’ ன்னு ஏளனம் பேசும்.

விரால் மீனைப் பார்த்தால், “அண்ணே,நீதான் இந்த குளத்துக்கே ராசா. உனக்குத்தான் அதிக விலை தருகிறாங்க; நீதான் பணக்கார மீன்” ன்னு பாராட்டும்.அது போனதும்,”என்ன பெரிய விரால்? என்னோட சதைசுவைக்கு முன்னாடி நிற்கமுடியாது”ன்னு ஏளனமாகப் பேசும்.

இதுபோல எல்லா உயிரினங்களையும் எதிரில் புகழ்ந்து பேசி, அவற்றை போகவிட்டு பறம் பேசுவதைேயே வழக்கமாக 

வைத்திருந்தது.

ஒருநாள் தூண்டில்காரர் ஒருவர் போட்டு வைத்திருந்த தூண்டிலில் இந்த விலாங்கு மீன் மாட்டிக் கொண்டது. குளத்திலிருந்த எல்லா உயிரினங்களையும் கூப்பிட்டு காப்பாறும்படி கெஞ்சியது.

பாம்பு,” நான் நஞ்சு இல்லாத வெறும் தண்ணீர்ப் பாம்பு” ன்னும்,

கெளுத்திமீன்,”என்னோட தலையில் உள்ள முள் உன்னைக் காப்பாற்றாது” ன்னும்,

நண்டு,” எனக்கு

தலை இருந்தால்தானே உன்னைக் காப்பாற்ற மூளை இருக்கும்”ன்னும்,

ஆமை,”நானே ஓட்டுக்குள் ஔிந்து கொண்டு இருக்கேன்” ன்னும்,

விரால்,”உன்னைக் காப்பாற்ற நான் வந்து மாட்டிக் கொண்டால், உன்னை விட்டுவிட்டு பணக்கார மீனுன்னு என்னைப் பிடிச்சுக்கிட்டு போய் 

விடுவர்”ன்னும் பதில் சொல்லி  யாருமே காப்பாற்ற முன்வரவில்லை.

“போகவிட்டுப்  புறம் சொல்லி” விலாங்கு மீன் எல்லாரிடமும் கெட்டபெயர் வாங்கியதால் எல்லாரும் ஒதுக்கிவிட்டார்கள். எனவே, நாமும் இந்த தவறை செய்யாமல் நேர்மையாக வாழ்வோம்.

நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்

 நஞ்சினை தன்னிடம் கொண்ட பாம்போடு ஒருபோதும் பழகக்கூடாது! இதுபோல் நஞ்சினை ஒத்த  தீயஎண்ணம்,தீயசெயல் கொண்டவர்களோடு ஒருநாளும் நெருங்கிப்பழக வேண்டாம்! இதுவே நமக்கான அறிவுரையாகும்.

இந்த நீதியை விளக்கும் ஒரு கதையைப் பார்ப்போமா….

ஒரு காலத்தில் ஜமீன்தார் மாளிகையாக இருந்த  கட்டடம் இன்று இடிந்து சிதிலமாகி கிடக்கிறது. அந்த பாழடைந்த மாளிகையில் எலி, பெருச்சாளி, காட்டுப்பூனை, பூனை,பாம்பு, கீரி,வௌவால், ஆந்தை, கழுகு, போன்றவிலங்குகள் வசிக்கின்றன. அங்கு சுத்தமாக மனித நடமாட்டமே கிடையாது. அந்த இடிந்த மாளிகையிலும் சுற்றி உள்ள இடங்களிலும் மரங்களும் செடி கொடிகளும் புதர்போல மண்டிக்கிடக்கின்றன. மாளிகைக்கு சிறிது தொலைவில் பயன்பாட்டில் இல்லாத  ஒரு குளம் உண்டு. அதில் நிறைய மீன்கள், நண்டுகள், தவளைகள், நீர்ப் பாம்புகள், நீர்க்கோழிகள் என பலதரப்பட்ட உயிரினங்கள் வசித்தன.

பாழடந்த அந்த மாளிகையில் இருக்கும் பல  உயிரினங்களில் ஒரு பூனையும் ஒரு ராஜநாகமும் மிகவும் நட்பாக இருந்தன. ராஜநாகம் என்பதால் மற்ற பாம்புகளும் கூட அதற்கு பயந்து ஔிந்து கொண்டன;காரணம் ராஜநாகம் என்பது மற்ற சிறு பாம்புகளை உணவாகப் பிடித்து சாப்பிட்டுவிடும். ராஜநாகத்துக்கு நண்பன் என்பதால் பூனைக்கு கர்வம் அதிகம். மற்ற விலங்குகள் எல்லாம் அதனோடு சேராமல் விலகியே நிற்கும்.

ராஜநாகத்துடன் நட்பாக இருப்பது என்றைக்கு இருந்தாலும் ஆபத்துதான் என்று கழுகு ஒன்று அந்தப் பூனையிடம் அறிவுறை கூறியது; பூனை அதை காதில் வாங்கவே இல்லை.

தினந்தோறும் நிறைய எலிகளைப் பிடித்துவந்து நண்பன் ராஜநாகத்துக்கு பூனைகொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் குளத்திலிருந்து தவளை, மீன், நீர்ப்பாம்புகளையும் பிடித்துவந்து கொடுக்கும். இதனால் ராஜநாகம் உணவுக்காக தேடி அலையும் சிரமம் இல்லாது போயிற்று; பூனையிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ராஜநாகம் எல்லாருக்கும் எச்சரிக்கை செய்தது. இது எல்லாருக்கும் எரிச்சலைக் கொடுத்தது.

ஒருநாள் எலிகள் எல்லாம் ரகசியக் கூட்டம் போட்டன.சில நாட்கள் யாரும் பூனையின் கண்ணில் படவே கூடாது என்று முடிவு செய்தன. குளத்தில் இருந்த மீன், பாம்பு போன்றவை குளத்தின் கரைபக்கமே வராமல் குளத்தின் நடுவிலேயே சில தினங்கள் இருக்க முடிவு செய்தன.

அடுத்தநாள் பூனை எலிகளைத் தேடி அலைந்தது;கிடைக்கவில்லை. குளக்கரைக்கு சென்றால் அங்கேயும் யாரையும் காணவில்லை.பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கும் பசி வந்து வாட்டியது;பூனைக்கே உணவு கிடைக்காதபோது பாம்புக்கு எங்கிருந்து உணவு கொடுப்பது.

பூனை எலியைப்பிடித்துவரும் என்று பாம்பு காத்திருந்து பசியால் துடித்தது. பூனைமீது அதற்கு கோபமாக வந்தது.

சூரியன் மறைந்து இருள் வந்தவுடன் எங்கிருந்தோ தவறிப்போய் ஒரு எலி வந்தது. ஒரே பாய்ச்சலில் அதைப்பிடித்து பூனை சாப்பிட ஆரம்பித்தது. அந்தநேரம் பார்த்து ராஜநாகம் அங்கு வந்தது. எலியைப்பிடித்து பூனை சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அதற்குக்  கோபம் தலைக்கேறியது.” என்னை பசியில் துடிக்க விட்டு நீ மட்டும் எலியைப் பிடித்து சாப்பிடுகிறாயா”என்று கேட்டபடியே பூனையை ஓங்கி கொத்தி நஞ்சை அதனுடம்பில் பாய்ச்சியது;பூனை துடிதுடித்து இறந்தது.

வாயில் நஞ்சு வைத்திருக்கும் பாம்புடன் பழகக்கூடாது. என்றைக்கிருந்தாலும் அது நம்மை ஆபத்தில் கொண்டுபோய் விடும் என்பதுதான் நமக்கான நீதி.

 (அதைப்போலவே எண்ணத்திலும் செயலிலும் தீமை கொண்டவர்களிடம் பழக்கக்கூடாது; அவர்களால் நமக்கு ஆபத்து நேரும் என்பது நமக்கான அறிவுரையாகவும் கொள்ளலாம்)

நல்லிணக்கம் இல்லாரோடு இணங்கவேண்டாம்

 அது ஒரு அழகிய சிற்றூர். ஆனாலும் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கு அதுதான் பல வகையிலும் ஆதாரமான ஊர்.அந்த ஊரில் ஒரு காவல் நிலையம் உண்டு. அந்த காவல் நிலையத்துக்கு உதவி ஆய்வாளர் ஒருவர் மாறுதலில் வந்தார். அந்த ஊரில் எல்லா வசதிகளும் நிறைந்த வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து அவர் குடும்பம் அங்கு குடியேறியது. உதவி ஆய்வாளருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருந்தான்.

அவன் பெயர் பாஸ்கர். அவனை அவ்வூரின் நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். அந்த பள்ளிதான் சுற்றிலும் உள்ள இருபது ஊர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியாக இருந்தது. அங்குதான் சாதி மத பேதமில்லாமல் எல்லா தரப்பு பிள்ளைகளும் படிக்க வேண்டிய கட்டாயம்.

உதவி ஆய்வாளர் வீட்டுக்கு அடுத்த வீட்டிலேயே கண்ணையன் என்ற பையனும் ஐந்தாம் வகுப்பில் படித்துவந்தான்.பள்ளி தொடங்கிய இரண்டாம் நாளே கண்ணையன் பாஸ்கருக்கு நண்பனானான். இருவரும் அடுத்தடுத்த வீடு என்பதால் பள்ளி செல்லதும் வீடு திரும்புவதும் ஒன்றாகவே சென்றுதிரும்புவார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாணவர்களிடமும் பாஸ்கர் பழகத் தொடங்கினான். இது கண்ணையனுக்கு பிடிக்கவில்லை.

சில மாணவர்களை இசுலாமியர்கள், சிலரை கிருத்துவர்கள்,வேறு சிலரை தாழ்ந்தவர்கள் என்று கூறி, அவர்களோடு நட்பாகப் பழகாதே என்று பாஸ்கருக்கு அறிவுறை கூறினான்.

“யாராயிருந்தால் என்ன, ஒரே பள்ளியில்தானே படிக்கிறோம்,பழகுவதில் என்ன தவறு ” என்று கேட்டான் பாஸ்கர்.

வீட்டிலும் கண்ணையன் பற்றி அம்மா அப்பாவிடம் கூறினான். அவர்களும் “அப்படியெலலாம் பேதம் பார்க்கக்கூடாது;எல்லாரோடும் நல்லிணக்கமாகவே பழக வேண்டும். நம்மை ஒருவர் ஒதுக்கி வைத்தால் நாம் என்ன துன்பம் படுவோமோ அதைப்போலத்தான் அவர்களும் வேதனைப்படுவார்கள். அதனால் நீ எல்லாரோடும் சமமாகப் பழகவேண்டும்” என்று கூறினார்கள்.

அடுத்தடுத்த நாட்களிலும் கண்ணையன் பாஸ்கரிடம் சிலரது நட்பை துண்டிக்கும்படி வற்புறுத்தினான். பாஸ்கர் அதற்கு இணங்கவே இ்ல்லை.

அன்றைய வகுப்பில் தமிழாசிரியர் உலகநீதியைப் பாடமாக நடத்தினார்.

நல்லிணக்கம் இல்லாதவருக்கு இணங்கக்கூடாது; அவர் நட்பு கெட்டாலும் அதைப் பொருட்படுத்தக் கூடாது என்று விளக்கம் கூறினார்.அவ்வாறு பேதம் பார்ப்பவர்கள் மக்கள் மத்தியிலே புற்று நோயைப் பரப்புபவர்கள் ஆவார் என்று தமது கருத்தையும்  கூறினார்.

Thursday, February 13, 2025

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

 ஒரு கோவிலுக்கு அருகில் பெரிய குளம் இருந்தது. அந்த குளத்திலே ஒரு பக்கம் தாமரைக் கொடிகளும் எதிர்பக்கம் அல்லிக் கொடிகளும் வளர்ந்திருந்தன. அந்த குளத்திலே கெண்டை, கெளுத்தி, விரால், குரவை, தவளை, நண்டு, நத்தை, aஆமை, தண்ணீர் பாம்புகள் என்று நீரில் வாழும் உயிரினங்கள் நிறைய இருந்தன. அதில் விலாங்கு என்கிற மீனும் இருந்தது.

இந்த விலாங்குமீன் தந்திரம் தெரிந்த மீன். இதன் தலை பாம்பு போல இருக்கும்; வால் பகுதி மீன் போல இருக்கும். பாம்புகளிடமிருந்து தப்பிக்க பாம்புகளிடம் தலையைக்காட்டி தப்பித்துவிடும். மீன் கூட்டத்திற்கு தன் வாலைக்காட்டி மீன் கூட்டத்தில் சேர்ந்துகொள்ளும். இந்த தந்திரத்தாலே இது மீன் கூட்டத்திலும்,பாம்பு கூட்டத்திலும் 

சேர்ந்து இருக்கும். இதனால் தன்னை ஒரு அறிவாளியாக எண்ணிக் கொண்டு நீரில் வாழும் மற்ற உயிரினங்களை பற்றி அவை இல்லாதபோது மிகவும் தாழ்வாக பேசும். பெரும்பாலும் சேற்றில் மறைந்து கொள்ளும். 

ஏதாவது பாம்பைக் கண்டால், 

“அண்ணே, வணக்கம்”என்று கூழைக் கும்பிடு போடும். அந்த பாம்பு நகர்ந்து சென்றதும்,

” இது கொஞ்சமும் நஞ்சு இல்லாத தண்ணீர்ப் பாம்பு; இது கடித்தால் யாரும் சாகவே மாட்டார்கள்; ஆனாலும் பாம்புங்கிற  பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை” என்று அதைப்பற்றி இழிவாகப் பேசும்.

கெளுத்தி மீனைப் பார்த்தால்,

“எல்லா மீனையும் கொத்தி சாப்பிடும்  நாரை, கொக்குயெல்லாம் உனக்குத் தாடையில் முள் இருக்கறதால  

உன்னைக் கொத்தாமல்  பயந்து ஓடிடும்” என்று புகழ்ந்து பேசும். அது நகர்ந்து போனதும்,

“இதெல்லாம் கொக்கு கூட விரும்பாத ஒரு பிறவி” ன்னு  மற்ற மீன்களிடம் கேலி பேசும்.

எதிரே நண்டு வருவதைக் கண்டால்,

“நண்டு நண்பா, உன்னைப்போல். எனக்கும் கொடுக்கு இருந்தால் எல்லாரும் என்னைப் பார்த்து பயப்படுவார்கள்” என்று பயப்படுவது போல கூறும். அது சென்றதும்,

“கொடுக்கு இருந்தால் மட்டும் போதுமா? இது தலையே இல்லாத முண்டம்தானே;தலையில்லாட்டி மூளை எப்படி இருக்கும்” ன்னு அதன் உருவத்தைக் கேலி பேசும்.

ஆமையைக் கண்டால்,”நண்பா,உன்னைப்போல் பாதுகாப்பான ஓடு யாருக்குமே இல்லை; ஆபத்து வந்தால் ஓட்டிற்குள் 

பதுங்கிக் கொள்வாய்;உன்னை கொல்லவே முடியாது” ன்னு பாராட்டிப் பேசும். அது அகன்றதும்,”இதெல்லாம் நீரிலிருந்து தரைக்குச் சென்றால், இதைத் திருப்பிப் போட்டு ஒரு அடி கொடுத்தால் ஆள் அதோடு காலி’ ன்னு ஏளனம் பேசும்.

விரால் மீனைப் பார்த்தால், “அண்ணே,நீதான் இந்த குளத்துக்கே ராசா. உனக்குத்தான் அதிக விலை தருகிறாங்க; நீதான் பணக்கார மீன்” ன்னு பாராட்டும்.அது போனதும்,”என்ன பெரிய விரால்? என்னோட சதைசுவைக்கு முன்னாடி நிற்கமுடியாது”ன்னு ஏளனமாகப் பேசும்.

இதுபோல எல்லா உயிரினங்களையும் எதிரில் புகழ்ந்து பேசி, அவற்றை போகவிட்டு பறம் பேசுவதைேயே வழக்கமாக 

வைத்திருந்தது.

ஒருநாள் தூண்டில்காரர் ஒருவர் போட்டு வைத்திருந்த தூண்டிலில் இந்த விலாங்கு மீன் மாட்டிக் கொண்டது. குளத்திலிருந்த எல்லா உயிரினங்களையும் கூப்பிட்டு காப்பாறும்படி கெஞ்சியது.

பாம்பு,” நான் நஞ்சு இல்லாத வெறும் தண்ணீர்ப் பாம்பு” ன்னும்,

கெளுத்திமீன்,”என்னோட தலையில் உள்ள முள் உன்னைக் காப்பாற்றாது” ன்னும்,

நண்டு,” எனக்கு

தலை இருந்தால்தானே உன்னைக் காப்பாற்ற மூளை இருக்கும்”ன்னும்,

ஆமை,”நானே ஓட்டுக்குள் ஔிந்து கொண்டு இருக்கேன்” ன்னும்,

விரால்,”உன்னைக் காப்பாற்ற நான் வந்து மாட்டிக் கொண்டால், உன்னை விட்டுவிட்டு பணக்கார மீனுன்னு என்னைப் பிடிச்சுக்கிட்டு போய் 

விடுவர்”ன்னும் பதில் சொல்லி  யாருமே காப்பாற்ற முன்வரவில்லை.

“போகவிட்டுப்  புறம் சொல்லி” விலாங்கு மீன் எல்லாரிடமும் கெட்டபெயர் வாங்கியதால் எல்லாரும் ஒதுக்கிவிட்டார்கள். எனவே, நாமும் இந்த தவறை செய்யாமல் நேர்மையாக வாழ்வோம்.

நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்

 புலவர் உலகநாதர் இயற்றிய ‘உலகநீதி’ யில் இரண்டாவது செய்யுளில் உள்ள இரண்டாவது நீதி ‘நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்’ என்பதாகும். இதன் பொருள் : நடவாது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்தக் கூடாது.இதை விளக்கும் விதமாக அமைந்த சிறுவர்கான கதை நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்.

 பெரிய சோலை ஒன்று இருந்தது. அந்த சோலையில் மயில்,குயில்,மைனா,கிளி, காகம், சிட்டுக்குருவி, ஆந்தை,காடை,வான்கோழி, நீர்ப்பறவையான வாத்து,கொக்கு போன்றவையும், அணில் போன்ற சிறு விலங்குகளும்  ஒன்றுகூடி வசித்தன.மயில் கார்மேகம் கண்டதும் ஆடத்துவங்கும்.

குயில் இனிய குரலில் கூவும்.மைனாக்கள் ஒன்றுகூடி பலவிதமான ஒலிகளை எழுப்பி இங்குமங்குமாக பறந்து கொண்டிருக்கும். அழகான நிறத்தோடு கிளி பறந்து பறந்து பழங்களையும்,சத்தான கொட்டை வகைகளையும் வலுவான அலகினால் உடைத்து சாப்பிடும்.’காகா’என கரைந்து காகம் தம் இனத்தோடு உணவைப் பகிர்ந்து கொள்ளும். ‘கீச்கீச்’ என்று சப்தமிட்டபடியே தங்கள் கூட்டத்தோடு சிட்டுக்குருவிகள் நாலாபுறமும் பறந்தபடி இருக்கும்.

இரவில் கண்விழித்து ஆந்தைகள் ஒலியெழுப்பியபடி இருக்கும். உயரமான மரப் பொந்துகளில் இருந்து கொண்டு காடைகள் ஒலியெழுப்பி சுற்றிலும் பறந்து கொண்டிருக்கும். வான்கோழி தன் இனத்தோடு மட்டிலும் பெரிய குழுவாக இருக்கும். 

பகலில் தரையில் இரைதேடும் இது, இரவில் பறந்துபோய் மரத்தில் மேல் அமர்ந்து தூங்கும்.

எல்லாரும் மயிலின்  அழகையும்,நடனத்தையும் புகழ்வது வான்கோழிக்குப் பொறாமையைக் கொடுக்கும். “எனக்கும்தான் தோகை இருக்கு;ஆனால் என்ன கொஞ்சம் நீளம்தான் குறைவு;என்னாலும் நடனமாட முடியும்” என்று கூறி மயிலை வம்புக்கு இழுக்கும். காகமும்,ஆந்தையும் வான்கோழிக்கு தூபம் போட்டு தூண்டிவிடும்.

ஒருநாள் மாலை நேரம்; மேகம்  கருத்து மழைவருவதற்கான குளிர்ந்த காற்று வீசியது. அந்தநேரம்தான் மயில் தன் அழகிய தோகை விரித்து ஆடும் நேரம். மயில் தன் தோகையை விரித்து ஆடத் தொடங்கியது. சோலையில் இருந்த பறவைகளும் சிறு விலங்குகளும் அங்கே குழுமி மகிழ்ந்து  சப்தமிட்டு ஆரவாரம் செய்தன. இதைக்கண்ட வான்கோழி தன்னுடைய சிறிய சிறகை விரித்து  ஆடத் தொடங்கியது. தன்னால் முடியாது எனத் தெரிந்தும் ஆடுவதற்கு முயன்று மயிலின் முன் அது தோற்று, எல்லாருடைய ஏளனத்துக்கும் ஆளானது.

நடக்காது என்பது நன்கு தெரிந்தும் பொறாமையால் முயன்ற வான்கோழி அவமானப்பட்டு நின்றது. இதைத்தான் செய்யுளின் இந்தவரி உணர்த்துகிறது.

நடக்காது என்று தெரிந்தகாரியத்தை நிலை நிறுத்தக் கூடாது

Wednesday, August 28, 2024

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

 நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன் வளர வளர அவனுக்கு அரண்மனை மிகவும் போர் அடிக்க ஆரம்பித்தது. பெரிதாக எந்த வேலையும் அவனுக்கென்று இல்லாதது ஆச்சர்யமாக உணர்ந்தான்.

அரண்மனையில் வேலை செய்யும் அனைவருமே பரபரப்பாக இருந்தார்கள். இளவரசன் தான் இப்படி சும்மா அங்கும் இங்கும் நடந்து செல்கிறோம் அவ்வளவுதானே என சலித்து கொண்டான். மற்றவர்கள் ஏன் இப்படி பரபரப்பாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அங்கு சென்றால் அவர்கள் இளவரசர் வந்துவிட்டார் என எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக நின்று விடுகிறார்கள். அது இளவரசனுக்கு மேலும் கடுப்பை கொடுத்தது. இதற்கு முடிவு கட்ட நினைத்த இளவரசன் சமையலறை எப்போதுமே பரபரப்பாக இருக்கிறது. அதனால் அங்கு செல்லலாம் என முடிவு செய்தான். ஆனால் இந்த முறை இளவரசனாக அல்லாமல் சமையலறையில் எடுபுடி வேலை செய்யும் பையனை போல மாறு வேடம் போட்டு சென்றான். அங்கு உள்ளே நுழைந்ததும் ஒரு 10, 15 பேர் அதிரடியாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். என்னடா இது? நமக்கு ஒரு வேலை இல்லை இவர்கள் நிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள் என யோசித்து கொண்டே இருந்தான். அவன் அருகில் இருந்த ஒருவன் என்னடா வேடிக்கை பார்க்கிறாய், இளவரசர் உணவருந்த அந்த வெள்ளி தட்டுகளை சுத்தம் செய் என்றான்.

ஒரு தட்டில் தானே சாப்பிட போகிறார் அதற்கு ஏன் இவ்வளவு சுத்தம் செய்ய வேண்டும் என்றார் இளவரசன். அதற்கு எதிரில் இருந்தவன் ஆனால் அவர் எந்த தட்டில் சாப்பிடுவார் என தெரியாது ஆகையால் மேஜையில் தட்டுகள் நிறைந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் தூக்கி எறிவார் என்றான்.

அதை கழுவி முடிப்பதற்குள் ஆரஞ்சு மற்றும் திராட்சை பழங்களை வைத்து தோல்களை நீக்க சொன்னான். அதற்கு திராட்சை தோல்களையுமா என்று கேட்டான் இளவரன். ஆமாம், திராட்சை தோல்கள் அவர் வாயில் சிக்கினால் எதிரில் இருப்பவன் செத்தான் என்றான். இளவரசன் யோசிப்பதற்குள் உடைகளை துவைத்து காயவைத்து சரியாக மடித்து இருக்க வேண்டும் என ஒருவன் துணி மூட்டையை கொடுத்தான்.

தன்னைத்தானே திட்டி கொண்டு அந்த வேலைகளை செய்து முடித்தான். அதற்குள் இளவரசர் உணவில் இருக்கும் சீரகத்தை தனியாக எடுக்க வேண்டும் என்றான் ஒருவன். கண்கள் பிதுங்கி வெளியே வரும் அளவுக்கு முழித்தான் இளவரசன். ஏன்.. ஏன் என்றான். அதற்கு அருகில் இருந்தவன் அவருக்கு உணவில் சீரகம் இருப்பது பிடிக்காது என்றான். அப்படியென்றால் அதை போடாமல் சமைக்கலாமே என்றான் இளவரசன். அப்படி செய்தால் ருசி இல்லை என பயங்கரமான தண்டனைகளை கொடுப்பார் என்றான். அவ்வளவு கொடுமைக்காரனா என இளவரசன் கேட்க, கொஞ்சம் சோம்பேறி அவ்வளவுதான் என சொல்லி முடித்தான். இளவரசனுக்கு ஒரு வேலை இல்லாமல் இவர்களே செய்து முடித்தால் நான் என்ன செய்வேன் என் பொழுதை போக்க என யோசித்து கொண்டே தனது அறைக்கு வந்தான். கொஞ்ச நேரத்திலே உணவு தயார் என செய்தி வர காலையில் இருந்து வேலை செய்த அலுப்பில் இருந்தான் இளவரசன்.

அந்த சோர்வான முகத்துடன், அவன் முன் வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டான். இதில் இருக்கும் சின்ன சின்ன உழைப்பும் அவன் கண் முன் வந்தது. அங்கிருந்த வேலையாட்களிடம் கனிவாக பேச ஆரம்பித்தான். அவனிடம் ஏதோ மாற்றம் இருப்பதை பணியாட்கள் புரிந்து கொண்டார்கள். அதன்பிறகு அவன் பல வேலைகளை தானே செய்து கொண்டான். இதனால் அவன் மனது நிம்மதியாக இருந்தது. சும்மா இருப்பதாக எந்த எண்ணமும் அவனுக்கு தோன்றவில்லை.

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed