Wednesday, November 22, 2023

சுட்டி சுட்டி உன் வாலை கொஞ்சம் சுருட்டிக்கோ

 

ஒரு அழகான சின்ன வீடுஅதுல அம்மாஅப்பா , குழந்தைகள் என ஹாப்பியா இருந்தாங்கஅவங்க வீட்ல பூனைநாய்கிளி என வீட்டு பிராணிகளை வளர்த்து வந்தாங்கஅவங்க வீட்ல ஒரு குட்டி பப்பி இருந்துச்சுஅதோட பேரு கிட்டோ . ரொம்ப சுட்டி தனம் கொண்ட குட்டி நாய் அதுஅது பிறந்து 3 மாசம் தான் ஆகுதுபாக்குறது கொஞ்சம் புஸு புஸுன்னு இருக்கும்நல்ல வெள்ளை கலருல அங்க அங்க கொஞ்சம் கருப்பு கலர் புள்ளி இருக்கும்நீங்க 101 டால்மேஷன் படம் பார்த்திருக்கீங்களா அதுல வர குட்டி பப்பி மாதிரி நினைச்சுக்கோங்க..


குட்டி கிட்டோ எப்போவும் துரு துருன்னு இருக்கும்எதையாவது செஞ்சு எதுலையாச்சும் மாட்டிக்கும்அதுலயும் கிட்டோக்கு கூடைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்அதுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கும்கூடைய பாத்துட்டா அத விடவே விடாது.


இப்போ ஒரு கூடையை பாத்துருச்சுனு வச்சிக்கோங்க அது உள்ள பொய் குதிச்சு விளையாடும்அந்த கூடைக்குள்ள உருண்டு விளையாடிட்டே இருக்கும்அத விட்டு வெளியவே வராதுஅந்த கூடைக்குள்ள எதுவும் இல்லனா கிட்டோ உள்ள பொய் மண்டையில் மாட்டிகிட்டு அங்கேயும் இங்கயும் நடக்கும்வீட்டுக்கு புதுசா யாராச்சும் வராங்க அப்படினாஅச்சோ இந்த வீட்ல என்னடா கூடை நடக்குதுன்னு பதறி பாப்பாங்கநம்ம கிட்டோ உள்ள இருப்பாருஅவருதான் ரொம்ப குட்டி ஆச்சேஉள்ள இருக்குறது வெளியவும் தெரியாதுஅந்த அளவுக்கு கிட்டோக்கு கூடைகள் மீது ஆர்வம் அதிகம்.

தீடிரென ஏதோ சீருற மாதிரி சத்தம் கேட்டுச்சுஏதோ கிட்டோ மூஞ்சில குத்துற மாதிரி , ஈரமா இருந்துச்சுகிட்டோ முகத்துல ஏதோ கூர்மையான பொருளை வச்சு கீறின மாதிரி இருந்துச்சுபாவம் நம்ம கிட்டோசட்டுனு கூடையை விட்டு வெளிய குதிச்சுதுபக்கத்துல இருந்த தண்ணி பௌல்ல தலையை விட்டுச்சு. 'அறிவிருக்கா குட்டிபெரிய சத்தத்துடன் கிட்டோவோட அம்மா வந்துச்சு. ' அந்த பாஸ்கெட்ல தான் அந்த குண்டு பிளாஸ்ஸி வாழ்றாள்அவளோட பூனைக்குட்டிகளை அங்கதான பத்திரமா பாத்துக்குறாஅது உள்ள உன்ன யாரு தலையை விட சொன்னதுசெம திட்டு நம்ம கிட்டோக்கு அவங்க அம்மாகிட்ட இருந்துஅதுக்கு அப்புறம் நம்ம கிட்டோ எந்த கூடை பக்கத்துலயும் போறது இல்லஆகையால் குட்டிஸ் நம்ம கிட்டோ மாதிரி சில நேரங்களில் உங்கள் வால் தனங்களை சுருட்டி வச்சிக்கோங்கநமக்கு தேவையில்லாத இடங்களுக்கு போக வேண்டாம்செஞ்சி பாத்துடலாம் என சுட்டிதனம் பண்ணாம ஸ்கூல் போறதுக்கு ரெடி ஆகுங்கஇன்னொரு கதைல நாம மீட் பண்ணலாம்.

 

ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா?

 


ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு  அந்தக் கிளையையே வெட்டினானாம்.

 

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.

 

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

 

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன்ஐயோஎன்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

 

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவிஐயோவை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

 

அதான்ஐயோஎன்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.

 

Tuesday, November 21, 2023

‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’

 

ஒரு பூனை ஒரு பெரிய மரத்துக்கும் கீழே நின்னுகிட்டு இருந்திச்சு.

அப்போது  வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவுல கேட்டுச்சு. பூனை அதை உற்றுக் கேட்டுச்சு

 

அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்திச்சு.

அந்த நரி பூனைக்கிட்ட , ” வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்துட்டா எப்படி தப்பிப்பாயாம்அப்பிடின்னு கேட்டிச்சு.

 

அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.

இந்த மரத்தின் மீது ஏறி உச்சிக்குப் போய் தப்பிச்சுக்குவேன். அவைகள்லாம் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்ன்னு பதில் சொல்லிச்சு.

நீ எப்படி தப்பிச்சுக்குவாய்ன்னு பூனை நரிகிட்ட திருப்பிக் கேட்டிச்சு.

அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்அப்படின்னு பதில் சொல்லிச்சு.

 

அப்போ வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால பூனை மளமளன்னு மரத்தின்மேல ஏறிக்கிச்சு.

 

வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்துடுச்சு; கடைசி நேரத்துல ஒன்னும் தோனாமல் நரி மாட்டிக்கிச்சு.

பூனை நரியைப் பார்த்து கேட்டிச்சு, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்னுகூட நினைவுக்கு வரவில்லையாஅப்படின்னு.

 

 

முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது.

 

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed