Wednesday, November 22, 2023

சுட்டி சுட்டி உன் வாலை கொஞ்சம் சுருட்டிக்கோ

 

ஒரு அழகான சின்ன வீடுஅதுல அம்மாஅப்பா , குழந்தைகள் என ஹாப்பியா இருந்தாங்கஅவங்க வீட்ல பூனைநாய்கிளி என வீட்டு பிராணிகளை வளர்த்து வந்தாங்கஅவங்க வீட்ல ஒரு குட்டி பப்பி இருந்துச்சுஅதோட பேரு கிட்டோ . ரொம்ப சுட்டி தனம் கொண்ட குட்டி நாய் அதுஅது பிறந்து 3 மாசம் தான் ஆகுதுபாக்குறது கொஞ்சம் புஸு புஸுன்னு இருக்கும்நல்ல வெள்ளை கலருல அங்க அங்க கொஞ்சம் கருப்பு கலர் புள்ளி இருக்கும்நீங்க 101 டால்மேஷன் படம் பார்த்திருக்கீங்களா அதுல வர குட்டி பப்பி மாதிரி நினைச்சுக்கோங்க..


குட்டி கிட்டோ எப்போவும் துரு துருன்னு இருக்கும்எதையாவது செஞ்சு எதுலையாச்சும் மாட்டிக்கும்அதுலயும் கிட்டோக்கு கூடைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்அதுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கும்கூடைய பாத்துட்டா அத விடவே விடாது.


இப்போ ஒரு கூடையை பாத்துருச்சுனு வச்சிக்கோங்க அது உள்ள பொய் குதிச்சு விளையாடும்அந்த கூடைக்குள்ள உருண்டு விளையாடிட்டே இருக்கும்அத விட்டு வெளியவே வராதுஅந்த கூடைக்குள்ள எதுவும் இல்லனா கிட்டோ உள்ள பொய் மண்டையில் மாட்டிகிட்டு அங்கேயும் இங்கயும் நடக்கும்வீட்டுக்கு புதுசா யாராச்சும் வராங்க அப்படினாஅச்சோ இந்த வீட்ல என்னடா கூடை நடக்குதுன்னு பதறி பாப்பாங்கநம்ம கிட்டோ உள்ள இருப்பாருஅவருதான் ரொம்ப குட்டி ஆச்சேஉள்ள இருக்குறது வெளியவும் தெரியாதுஅந்த அளவுக்கு கிட்டோக்கு கூடைகள் மீது ஆர்வம் அதிகம்.

தீடிரென ஏதோ சீருற மாதிரி சத்தம் கேட்டுச்சுஏதோ கிட்டோ மூஞ்சில குத்துற மாதிரி , ஈரமா இருந்துச்சுகிட்டோ முகத்துல ஏதோ கூர்மையான பொருளை வச்சு கீறின மாதிரி இருந்துச்சுபாவம் நம்ம கிட்டோசட்டுனு கூடையை விட்டு வெளிய குதிச்சுதுபக்கத்துல இருந்த தண்ணி பௌல்ல தலையை விட்டுச்சு. 'அறிவிருக்கா குட்டிபெரிய சத்தத்துடன் கிட்டோவோட அம்மா வந்துச்சு. ' அந்த பாஸ்கெட்ல தான் அந்த குண்டு பிளாஸ்ஸி வாழ்றாள்அவளோட பூனைக்குட்டிகளை அங்கதான பத்திரமா பாத்துக்குறாஅது உள்ள உன்ன யாரு தலையை விட சொன்னதுசெம திட்டு நம்ம கிட்டோக்கு அவங்க அம்மாகிட்ட இருந்துஅதுக்கு அப்புறம் நம்ம கிட்டோ எந்த கூடை பக்கத்துலயும் போறது இல்லஆகையால் குட்டிஸ் நம்ம கிட்டோ மாதிரி சில நேரங்களில் உங்கள் வால் தனங்களை சுருட்டி வச்சிக்கோங்கநமக்கு தேவையில்லாத இடங்களுக்கு போக வேண்டாம்செஞ்சி பாத்துடலாம் என சுட்டிதனம் பண்ணாம ஸ்கூல் போறதுக்கு ரெடி ஆகுங்கஇன்னொரு கதைல நாம மீட் பண்ணலாம்.

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed