Friday, July 12, 2024

குழந்தை நீதி கதைகள்: பட்டு எப்படி உருவானது தெரியுமா?

 சீனாவில் உள்ள அந்த கிராமத்தில் ஒரு ஏழை நூற்பாலன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். அவள் தந்தைக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தாள். ஒருநாள் அந்த வழியாக சென்ற இளவரசர், செடிகளுக்கு நடுவில் அழகிய சிகப்பு நிற உடையில், கூர்மையான கண்கள், சிவந்த கன்னங்கள் கொண்ட ஒரு பெண் தெரிய அவள் கைகள் மாட்டும் கருமையாக காய்ப்பு பிடித்து போய் இருந்தது. அவள் கைகளை பார்ப்பதற்கு முன்பே அவள் மேல் காதலில் விழுந்தார் இளவரசர்.



கைகளை பார்த்ததும் கடின உழைப்பாளியாக இருப்பால் போலயே என அவளை உற்று பார்த்தான் இளவரசன். அது அத்தனை எளிதான உழைப்பாக அவனுக்கு தெரியவில்லை. எனவே அவளை மணம் முடிக்க எண்ணி அவளிடம் கேட்க அவள் அப்பாவை கைகாட்டி சென்றாள். இப்படி ஒரு பெண்ணா என அந்த ஏழை நூற்பாலனை பார்த்து திருமணத்திற்கு உத்தரவும் பெற்றான். ஆசையாய் காதல் மனைவியை அழகான அரண்மனையில் தங்க வைத்தான்.


எந்த வேலையும் அவளை செய்ய விடாமல் அத்தனை வேலை ஆட்களை நியமித்தான். ஆனால் அது எதுவுமே அவளை கவரவில்லை. அவளுக்கு எதுவோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வை கொடுத்தது. நாள் முழுக்க சுறு சுறுப்பாக இயங்கியவளுக்கு, சின்ன வேலைகள் செய்ய கூட இங்கு ஆள் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.


மனைவியின் நிலையை பார்த்து கவலை கொண்ட இளவரசன், அவளை மகிழ்விக்க நடன கலைஞர்கள், இசை மீட்டுபவர்கள் என பலவித கலைஞர்களை கொண்டு வந்தான். எதுவுமே சந்தோசம் கொடுக்காமல் போக ஒருநாள் அரண்மனை தோட்டத்தில் அமர்ந்து ஒரு கப்பில் சூடான நீரை அருந்தி கொண்டே, அவளது சிறிய கிராமம் அங்கு அவளை சுற்றி பரந்த குருவிகள் என அந்த நினைவுகளை ஆசை போட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவள் குடித்து கொண்டிருந்த கப்பில் இருந்த சூடான நீரில் ஏதோ புழுவின் கூடு போல விழுந்தது


அவள் மல்பெரி செடிகளுக்கு அருகில் இருந்ததால் அங்கிருந்து விழுந்திருக்கலாம் என அதை தூக்கி கீழே போட போனாள், அப்போது அந்த கூடு மட்டும் பஞ்சு போல மிருதுவாக இருப்பதை உணர்ந்தாள். அதை எடுத்து பிரித்து நூலாக திரித்தாள். அந்த நூல் அழகான மிருதுவான மின்னும் வடிவில் இருந்ததும் அவளுக்கு அவளது கிராமத்தில் செய்த வேலைகள் நினைவுக்கு வர குஷியானாள்.


உடனடியாக வேலையாட்களை வரவைத்து அங்கிருந்த புழு கூட்டை எடுத்து வெந்நீரில் கொதிக்க வைத்தாள். மின்னும் வகையில் மிருதுவான பஞ்சு கிடைக்கவே, அதை நூலாக திரிக்க இயந்திரத்தை வரவைத்து அதில் அழகான பட்டு நூலை தயாரித்தாள். அதை வைத்து அழகான உடையை தயார் செய்து இளவரசனுக்கு பரிசாக கொடுத்தாள். அதை அவன் உடுத்தியதை பார்த்து மகிழ்ந்தாள். இதை பார்த்த இளவரசனுக்கு மனைவியின் சந்தோசம் எதில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.


மனைவிக்காக மல்பெரி தோட்டங்களை வாங்கினான். அதில் இருந்த புழுக்கூட்டை வைத்து நூல் தயாரித்து பட்டு துணிகளை தயார் செய்தார்கள். இவை அனைத்தும் பெரிய பெரிய அரசர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்க மல்பெரி சில்க் என்றால் சீனா தான் என்று சொல்லுமளவுக்கு பெயர் வாங்கினார்கள். ஆசியாவின் எல்லா இடங்களுக்கும் இந்த பட்டு பரவியது. ஆனால் அதை எப்படி தயாரிக்கிறார்கள் என யாருக்குமே அவர்கள் சொல்லவில்லை. பெரும் ரகசியமாகவே காக்கப்பட்டது. வருடங்கள் பல ஓடின.


அரச ரகசியமாக காக்கப்பட்ட நூலை இங்கிருந்து வெளி ராஜ்ஜியத்திற்கு செல்லும் இளவரசிகளிடம் இதை சத்தியம் வாங்கி காத்தார்கள். மேலும் அவர்களின் உடைகள், பொருட்கள் என அனைத்தும் சோதித்தே அனுப்பி வைக்கப்படுவார்கள். பல வருடங்கள் கழித்து ஒரு இளவரசி இன்னொரு ராஜ்ஜியத்திற்கு செல்லும்போது அவளையும் சோதித்து அனுப்ப அவளும் அந்த நாட்டிற்கு சென்று விட்டாள்


கொஞ்ச நாட்களில் பட்டு இன்னொரு ராஜ்ஜியத்தில் கிடைக்கிறது என்ற உலகெங்கும் பரவியது. ரகசியம் எப்படி வெளியில் வந்தது என தெரிய வர சீனாவில் இருந்து சென்ற இளவரசி அவளின் நீண்ட கூந்தல் உள்ளே அந்த புழுக்களை வைத்து அங்கிருந்து தனது புது ராஜ்ஜியத்திற்கு எடுத்து செல்று, பட்டு தயாரித்து இருக்கிறாள். அதன் பிறகுதான் எல்லா இடங்களிலும் பட்டு கிடைக்க ஆரம்பித்தது. ரகசியமும் உடைந்தது. ஆக சுட்டிஸ், இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் சொல்லி மகிழுங்கள்.


No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed