குறிப்பு சட்டம்
§ முன்னுரை
§ இயற்கை வேளாண்மை என்பது
§ இயற்கை வேளாண்மையின் அவசியம்
§ இயற்கை வேளாண்மையின் நன்மைகள்
§ இன்றைய வேளாண்மை முறையும் பக்க விளைவுகளும்
§ முடிவுரை
முன்னுரை
விவசாயி ஒருவர் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்றடிப்படையில் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவினை வழங்கக் கூடிய ஒரு முறையாகவே இயற்கை வேளாண்மையானது காணப்படுகின்றது.
இயற்கை வேளாண்மை என்பது
இயற்கை வேளாண்மை என்பது யாதெனில் செயற்கையான கிருமி நாசினிகள் போன்றவற்றை பயன்படுத்தாது இயற்கையாக கிடைக்கப் பெறும் மக்கிய இயற்கை உரம், விலங்குக் கழிவுகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாயம்) முறையே இயற்கை வேளாண்மையாகும்.
அந்த வகையில் இயற்கையான வேளாண்மை முறையினூடாக ஆரோக்கியம் பேணப்படுவது சிறப்பானதாகும். மேலும் இயற்கை வேளாண்மையில் நெல், கோதுமை, கடலை, மிளகாய், தேயிலை, தக்காளி, வெள்ளரி, மஞ்சள், இஞ்சி போன்றவற்றை பயிரிடுவதன் மூலமாக அதிக விளைச்சலை பெற முடியும்.
இவ்வாறாக இயற்கை வேளாண்மையின் ஊடாக மட்டுமே ஊட்டமிக்க உணவுகளை பெற்றுக் கொள்ள முடிவது சிறப்பிற்குரியதாகும்.
இயற்கை வேளாண்மையின் அவசியம்
ஓர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சிறப்புற பேணுவதற்கு இயற்கை வேளாண்மை அவசியமானதாகும். ஏனெனில் இன்று அதிகரித்த சனத்தொகை பெருக்கத்திற்கேற்ப உணவு உற்பத்தி இடம் பெறுவது சிறப்பிற்குரியதாகும்.
மண்ணை சிதைவடையச் செய்யாது சிறப்புற வேளாண்மையை மேற்கொள்வதற்கு சிறந்த ஒரு முறைமையாக இயற்கை வேளாண்மையே காணப்படுவதோடு இயற்கை வேளாண்மையினூடாகவே சூழல் மாசடைவதானது கட்டுப்படுத்தப்பட்டு மண் வளம் பேணப்படுகிறது.
இயற்கை வேளாண்மையின் நன்மைகள்
இயற்கை வேளாண்மை முறைமையினால் உடலுக்கு தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான உணவினை பெற்றுக் கொள்ள முடியும்.
அதே போன்று ஆரோக்கியமான பயிர்கள் கிடைக்கப் பெறுதல், விவசாய ரீதியில் அதிக செலவு காணப்படாது, உற்பத்தியில் லாபம் கிடைக்கப் பெறல், மண்ணானது இயற்கை உரங்களினூடாக வளம் பெறும் என பல்வேறு நன்மைகளை தன்னகத்தே கொண்டமைந்ததாக இயற்கை வேளாண்மையானது காணப்படுகின்றது.
இன்றைய வேளாண்மை முறையும் பக்க விளைவுகளும்
இன்றைய வேளாண்மையானது செயற்கை வேளாண்மையை அடியொட்டியதாகவே வளர்ச்சியடைந்து வருகின்றது. அதாவது அதிகரித்து வரும் சனத்தொகை பெருக்கத்தின் காரணமாக பல்வேறு செயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மையினை மேற்கொள்கின்றனர்.
இதன் காரணமாக அதிகரித்த நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, மண் வளம் குன்றுதல் என பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் செயற்கை வேளாண்மையை தவிர்த்து இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதினூடாகவே பல்வேறு கொடிய நோய்களில் இருந்து எம்மை காத்துக் கொள்ள முடியும்.
முடிவுரை
ஒரு மனிதனானவன் சிறப்புற வாழ வேண்டுமாயின் அவன் செயற்கையான வழிமுறைகளை கைவிட்டு விட்டு இயற்கையான வேளாண்மையில் ஈடுபடுவதன் மூலமாகவே ஆரோக்கியமான ஊட்டமிக்க உணவுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவேதான் செயற்கை உரங்களே உயிர் கொல்லிகள் என்பதனை உணர்ந்து இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மையை மேற்கொள்வது எம்மையும் எம்மை சுற்றியுள்ளவர்களையும் காக்கும்.
No comments:
Post a Comment